Home CINEMA NEWS ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் யார் ஹீரோ தெரியுமா..!!! ஆனால் படம் 2024 ரிலீஸ்...

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் யார் ஹீரோ தெரியுமா..!!! ஆனால் படம் 2024 ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே..!!!

ayirathil oruvan 2

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டும்தான் வித்தியாசமான கதைகளை இயக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் செல்வராகவனும் ஒருவர். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

kadhal konden

தனது தம்பி தனுஷ் அவர்களை வைத்து காதல் கொண்டேன் என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார் செல்வராகவன் அந்த படம் மாபெரும் வெற்றியை அடைந்து தனுஷின் நடிப்பை பார்த்து வியந்தனர் சினிமா ரசிகர்கள். அதனைத் தொடர்ந்து 7G ரெயின்போ காலனி என்ற படத்தை இயக்கினார் செல்வராகவன் அந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்று இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்றது.

மறுபடியும் தனது தம்பி தனுசுடன் புதுப்பேட்டை என்ற படத்தை இயக்கினார் செல்வராகவன் தனுஷின் சினிமா பயணத்தில் முக்கியமான படமாகவும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது புதுப்பேட்டை. சூர்யாவின் தம்பி கார்த்திக் அவர்களை வைத்து ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை இயக்கினார் அந்தப்படம் யாருடா இந்த மனுஷன் இப்படி ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவில் இருக்கிறாரா என்று பிரமிக்க வைத்தது.

அதனை தொடர்ந்து தனது தம்பியை தனுஷை வைத்து மயக்கம் என்ன என்ற நல்ல படத்தை கொடுத்தார். அதன்பின் ஆர்யாவை வைத்து வித்தியாசமான கதையை இயக்குகிறேன் என்று இரண்டாம் உலகம் என்ற படத்தை எடுத்தார் அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை அதன்பின் மாலை நேரத்து மயக்கம் என்று புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கினார் அந்த படமும் சொல்லுமளவிற்கு இல்லாததால் சூர்யாவை வைத்து சமீபத்தில் என்ஜிகே என்ற படத்தை இயக்கினார் செல்வராகவன் அந்த படத்தின் ஒரு சில காட்சிகள் முன்பு வெளியான அரசியல் கதை கொண்ட படத்தில் அப்படியே வந்ததால் முக்கியமான காட்சிகளை தூக்கிவிட்டார் செல்வராகவன்.

என்ஜிகே ரிலீஸ் ஆனது ஆனால் செல்வராகவன் என்ன சொல்ல வருகிறார் என்று யாருக்கும் புரியாமல் போனது சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அதன்பின் தனது அடுத்த படத்தின் கதையை எழுதத் தொடங்கிய செல்வராகவன் எஸ் ஜே சூர்யா மற்றும் ரெஜினாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கினார் அதேபோல சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி என்ற படத்தையும் இயக்கினார் ஆனால் இரண்டு படங்களும் வெளியாகவில்லை. தற்பொழுது செல்வராகவன் சாணி காயிதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

நீண்ட நாட்களாக ஒரு கதை ஒன்றை எழுதி வந்தார் செல்வராகவன் அடுத்து இயக்கப்போவது என்ன படம் யாரை வைத்து எடுக்கப் போகிறார் என்ற சஸ்பென்ஸ் அவரது ரசிகர்களிடம் இருந்தது இந்நிலையில் புத்தாண்டு தினத்தை ஒட்டி ரசிகர்களுக்கும் மாபெரும் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் செல்வராகவன்.

செல்வராகவன் எடுத்து மாபெரும் வசூல் சாதனை புரிந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன் இந்த படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடிக்க ஜோடியாக ரீமா சென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து இருந்தார்கள். வித்தியாசமான அட்வென்ச்சர் படத்தில் பாண்டியர்கள் மற்றும் சோழர்களை பற்றிய கதை என்பதால் பெரிய வரவேற்பு கிடைத்தது ஆனால் கார்த்திக் அந்த ஒரு படத்திற்காக வேறு எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகாமல் பல வருடங்கள் காத்திருந்தார் அதன்பின் கார்த்திக் இதுபோன்ற காலம் எடுக்கும் படங்களில் நடிப்பதாக இல்லை என்ற முடிவில் இருந்தார்.

தற்பொழுது ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்கும் முடிவில் இருக்கிறார் செல்வராகவன் ஆனால் இந்தப்படம் மூன்று வருடங்கள் கழித்துதான் திரைக்கு வருமாம் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது கார்த்தி அல்ல செல்வராகவனின் தம்பி தனுஷ். புத்தாண்டை முன்னிட்டு அதிகாரப்பூர்வ தகவலை பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.

Exit mobile version