Home NEWS முதல்வரின் கொரோனா பொது நிவாரணத்தொகைக்கு தனது ஒரு மாதம் சம்பளத்தை அப்படியே கொடுத்த செக்யூரிட்டி..!!!...

முதல்வரின் கொரோனா பொது நிவாரணத்தொகைக்கு தனது ஒரு மாதம் சம்பளத்தை அப்படியே கொடுத்த செக்யூரிட்டி..!!! நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்.

stalin appreciate security worker

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது இந்நிலையில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பாக 25,000 மேல் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் முதல்வரான மு க ஸ்டாலின் அவர்கள் இந்த சூழ்நிலையை கையாள்வதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் கொரோனா நிவாரண நிதி கேட்டு வேண்டுகோள் விடுத்தார் தமிழகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இப்போது உள்ள சூழ்நிலையில் மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கை வசதிகள், தடுப்பூசி உற்பத்தி போன்றவற்றிற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வருக்கான பொது நிவாரண நிதிக்காக அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் போன்றவர்கள் நிதியை செலுத்தி வருகின்றனர் இதையடுத்து மாயவரத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி ஒருவர் சென்னையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் அவரது பெயர் தங்கதுரை.

அவர் தனது ஒரு மாத சம்பளம் 10,101 ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார் அவரே மிதிவண்டியில் சென்று நேராக முதல்வரிடம் கொடுக்க சென்றதாகவும் அவரிடம் கொடுக்க முடியாததால் வங்கியில் செலுத்தியதாகவும் கோரியுள்ளார் இந்த செய்தியை அறிந்த முதல்வர் நேரில் அழைத்து அவரைப் பாராட்டி உள்ளார் அவருக்கு பரிசாக ஒரு புத்தகத்தையும் வழங்கியுள்ளார்.

Exit mobile version