Home NEWS தேர்தல் நெருங்கும்நேரத்தில் ஆன்மீக பயணம் செய்யும் சசிகலா..!!! கோயிலில் குவியும் ஆதரவாளர்கள்..!!! குறையாத சசிகலா மாஸ்..!!!

தேர்தல் நெருங்கும்நேரத்தில் ஆன்மீக பயணம் செய்யும் சசிகலா..!!! கோயிலில் குவியும் ஆதரவாளர்கள்..!!! குறையாத சசிகலா மாஸ்..!!!

sasikala visit srirangam temple

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையிலிருந்து பிப்ரவரி எட்டாம் தேதி விடுதலை ஆகி சென்னை திரும்பினார். சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரை பெங்களூர் சிறைக்கு வெளியில் இருந்து வரும் பாதையில் எல்லாம் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து மிரள வைத்தனர்.

சசிகலா சென்னை நெருங்கியதும் அதிமுக தொண்டர்கள் சசிகலாவிற்கு பெரிய வரவேற்பை கொடுத்து சசிகலாவின் அரசியல் வருகை பற்றி கூறிவந்தனர். சசிகலா சிறையை விட்டு வெளியில் வந்ததும் நடப்பு அரசியலில் பெரிய மாற்றமும் பிரச்சினைகளும் வரப்போகிறது என்றெல்லாம் செய்திகள் வந்தது.

சென்னை வந்த சசிகலாவை முக்கிய பிரமுகர்கள் முதல் நடிகர் நடிகைகள் அனைவரும் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் சந்தித்து வந்தனர். கட்சித் தலைவர்கள் சசிகலா வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது.

ஆனால் சசிகலா திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். நான் அரசியலில் ஈடுபடவில்லை விலகுகிறேன் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து அம்மாவின் பொது எதிரி என்று கை காட்டப்பட்ட திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

சசிகலாவின் திடீர் அறிக்கையை பார்த்த பலர் சரியான முடிவு எடுத்திருக்கிறார் என்று கூறி வந்தனர் ஆனால் ஒரு சில தொண்டர்கள் சசிகலாவிடம் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். தன்னால் கட்சி தோல்வி அடைந்து விடக்கூடாது என்று அரசியலை விட்டு ஒதுங்கி கொண்டார் சசிகலா.

தற்பொழுது சசிகலா திருச்சி ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வழிபாடு செய்தார். திருச்சி ஸ்ரீரங்கம் வந்த சசிகளவிற்கு அமோக வரவேற்பை அவரின் ஆதரவாளர்கள் கொடுத்தனர்.

பேட்டரி காரில் அமர்ந்து கோவிலுக்கு சென்றார் சசிகலா. சசிகலா வந்த செய்தி அறிந்த உடன் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் திருச்சி மாநகர முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் அவர்கள் அவசர அவசரமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சசிகலாவை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

சசிகலா கட்சி பதவிக்கு ஆசைப்படவில்லை தற்போது அவர் மன அமைதியை தேடி கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார் இதற்கு முன் திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து உள்ளார் தற்பொழுது ஸ்ரீ ரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளார் என்று கூறி வருகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இன்னும் நிறைய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாக்க உள்ளது.

சசிகலாவின் இந்த ஆன்மீக பயணம் அவரது ஆதரவாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Exit mobile version