Home NEWS சசிகலாவை மலர் தூவி வரவேற்கும் தொண்டர்கள்..!!! பெங்களூரையே மிரளவைத்த சசிகலா..!!! அப்போ தமிழகத்தில் என்ன...

சசிகலாவை மலர் தூவி வரவேற்கும் தொண்டர்கள்..!!! பெங்களூரையே மிரளவைத்த சசிகலா..!!! அப்போ தமிழகத்தில் என்ன நடக்க போகுதோ..!!!

sasikala returns to chennai

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான சசிகலா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கி ஓய்வு பெற்றார். மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வு எடுத்துக் கொண்ட சசிகலா பிப்ரவரி 8ம் தேதி இன்று பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டார்.

நான்கு வருடங்களுக்கு பிறகு சசிகலா சென்னைக்கு வருவதால் அவரது தொண்டர்கள் சசிகலாவை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தனர். சசிகலா அவர்களின் காரில் அதிமுக கொடி பறக்க கூடாது என்று அரசு தரப்பில் தெரிவித்திருந்தன அதை மீறி பறந்தால் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தனர்.

வெடி வெடித்து பேண்ட் வாத்தியம் நடத்தி சசிகலாவை பெங்களூரிலிருந்து வரவேற்க விடியக்காலை ஐந்து மணியிலிருந்து அமமுக தொண்டர்கள் குவிந்தனர். சசிகலா காரைத் தொடர்ந்து 5 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கியிருந்தனர் காவல்துறையினர்.

பட்டாசு வெடிக்கவும் பேண்ட் வாத்தியம் வாசிக்கவும் தடையும் விதித்து இருந்தனர். ஆனால் அத்தனை தடையையும் மீறி தமிழக எல்லையான ஜுஜுவாடி மேளதாளத்துடன் 5000 பேர் சசிகலாவை வரவேற்றனர். வழியெங்கும் நூற்றுக்கணக்கான கார்கள் காணப்பட்டதால் சசிகலாவின் வரவேற்பை பார்த்து வியப்பில் உள்ளனர் பெங்களூர் பொதுமக்கள். சசிகலாவை பிரம்மாண்டமாக இப்படி வரவேற்றும் பொதுமக்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படவில்லை அந்த அளவிற்கு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.

சசிகலாவிற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த மக்கள் பெங்களூரிலேயே இந்த வரவேற்பு என்றால் சின்னம்மா தமிழகம் வந்தால் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ என்று கூறி வருகிறார்கள். சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வாரா முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு செல்வாரா சென்னை வந்தபின் என்னவெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் அவரது தொண்டர்கள். சசிகலாவின் வருகை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version