Home CINEMA NEWS ஆவேசத்துடன் சண்டை போடும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள்..!!! வெளியான மாஸ் ஸ்டில்ஸ்.

ஆவேசத்துடன் சண்டை போடும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள்..!!! வெளியான மாஸ் ஸ்டில்ஸ்.

saravana stores saravana arul fight

சரவணா ஸ்டோர்ஸ் ஒரு நேரத்தில் அண்ணாச்சி கடையின் மஞ்சப்பை கையில் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. பிஸியான சாலைகளிலும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் மஞ்சப்பை கண்டிப்பாக பார்க்கலாம்.

அண்ணாச்சி கஷ்டப்பட்டு உருவாக்கிய சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தை அண்ணாச்சிக்கு பிறகு அடுத்தடுத்து அவரது குடும்பத்தினர் பார்த்து வருகின்றனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஒருவர்தான் சரவணன் அருள்.

சரவணன் அருள் அவர்கள் தன்னுடைய கடையின் விளம்பரத்திற்கு வேறொரு நடிகரை நடிக்க அழைக்காமல் தானே முன்வந்து நடிக்கிறார். அவருடன் நடித்தால் மார்க்கெட் குறைந்து விடுமோ என்று நடிக்க மறுத்தனர் நடிகைகள்.

தமன்னாவும் ஹன்சிகாவும் சரவண அருள் அவர்களுடன் ஒன்றாக ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தனர். அந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு ஒரு பெரிய தொகையை கொடுத்ததாகவும் செய்திகள் இணையத்தில் உலா வந்தது.

விளம்பரப் படங்களில் நடித்து வந்த சரவணா அருள் சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமா சங்கத்திற்கு ஒரு பெரிய தொகை ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அப்பொழுது விளம்பரப் படத்தில் நடிக்கும் நீங்கள் சினிமாவில் ஹீரோவாக நடிக்கலாமே என்று ஒரு சிலர் உசுப்பேற்றிவிட்டனர்.

சரவணா அருள் அவர்களுக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை பல வருடங்களாக இருந்ததாம். இதுதான் நேரம் என்று 30 கோடி பட்ஜெட்டில் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களை வைத்து முதல் படத்தை எடுத்த வருகிறார்களாம். இந்தப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக கீத்திகா திவாரி என்ற மாடல் அழகி நடித்து வருகிறாராம்.

தற்பொழுது இணையத்தில் சரவணன் அண்ணாச்சி ஆவேசத்துடன் சண்டைபோடும் படு ஸ்டைலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ இந்த புகைப்படங்கள்.

Exit mobile version