Home CINEMA NEWS பிரபல நடிகர் சரத்பாபு உடல்நல நலமுடன் உள்ளார்…!!! வதந்திகளை யாரும் நம்பாதீர்கள்.. வேண்டுகோள் விடுத்த குடும்பத்தினர்..

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நல நலமுடன் உள்ளார்…!!! வதந்திகளை யாரும் நம்பாதீர்கள்.. வேண்டுகோள் விடுத்த குடும்பத்தினர்..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களின் ஒருவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சரத்பாபு.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நடிகர் சரத்பாபு அண்ணாமலை மற்றும் முத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் கடந்த 20 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

இவரின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் உடல் நலக்குறைவு காரணமாக செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு உயிரிழந்தார் என வதந்தி பரவியது.

இந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சரத் பாபுவின் சகோதரி உண்மை என்ன என்பதை தெரிவித்துள்ளார்.

சரத்பாபுவின் உடல்நிலை குறித்து அவரது சகோதரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சமூக வலைதளங்களில் சரத்பாபு பற்றிய அனைத்து செய்திகளும் தவறானவை. சரத்பாபு உடல் நலத்துடன் இருக்கிறார். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்பது எனது வேண்டுகோள் என கூறியுள்ளார்.

Exit mobile version