Home CINEMA NEWS இரவு நேரத்தில் ஜாலியாக நண்பர்ளுடன் கார் ரைடு!!! வைரலாகும் விஜய் மகன் சஞ்சய் வீடியோ.

இரவு நேரத்தில் ஜாலியாக நண்பர்ளுடன் கார் ரைடு!!! வைரலாகும் விஜய் மகன் சஞ்சய் வீடியோ.

Jason sanjay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான “வேட்டைக்காரன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு விஜயுடன் சேர்ந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் நடனமாடி இருப்பார். அதன் பிறகு எந்தவொரு திரைப்படத்திலும் நடக்கவில்லை.

மேலும் பள்ளிப்படிப்பை கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படித்து முடித்துவிட்டு தற்போது அப்பாவைப் போலவே சினிமா துறையில் ஈடுபட மிகவும் ஆர்வமாக உள்ளார். ஜேசன் சஞ்சய் “ஜங்ஷன்” என்ற குறும்படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அவர் அடிக்கடி நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

தற்போது சஞ்சயின் காரில் டிரைவிங் செய்தபடி பாட்டு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் சஞ்சய் இரவு நேரங்களில் கார் ரைட் செய்து பாட்டு கேட்டபடி ஜாலியாக செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை விஜய் ரசிகர்கள் வைரலாகி கொண்டே இருக்கின்றனர்.


Exit mobile version