Home CINEMA NEWS கொரோனவால் உணவவின்றி தவிக்கும் மக்களுக்கு தினமும் நேரில் சென்று உணவளித்து வரும் பிரபல நடிகை..!!!

கொரோனவால் உணவவின்றி தவிக்கும் மக்களுக்கு தினமும் நேரில் சென்று உணவளித்து வரும் பிரபல நடிகை..!!!

sanjana galrani distributing food

நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல நடிகை நிக்கி கல்ராணி அவர்களுடைய சகோதரி தமிழில் ஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி நிறைய கன்னட படங்களில் நடித்து வந்தார்.

இவருடைய தங்கை நிக்கி கல்ராணி தெலுங்கு தமிழ் மலையாளம் கன்னட படங்களில் நடித்துள்ளார். டார்லிங் படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணி தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது.

nikki galrani sister sanjana galrani

தங்கையை போல சஞ்சனா கல்ராணி கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கைதாகி இருந்த சஞ்சனா கல்ராணி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அவருடைய மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்க உத்தரவிட்டிருந்தார்.போதை பொருள் வழக்கில் கைதான சஞ்சனா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா நேரத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கு தினமும் உணவு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரே முகக் கவசங்கள் அணிந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு தற்பொழுது உணவு வழங்கி வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Exit mobile version