Home CINEMA NEWS புரட்டாசி தொடக்கம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகை சமந்தா..!!! புத்தி இல்லையா என்று பத்திரிகையாளருக்கு...

புரட்டாசி தொடக்கம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகை சமந்தா..!!! புத்தி இல்லையா என்று பத்திரிகையாளருக்கு டோஸ் விட்ட சமந்தா என்ன நடந்தது தெரியுமா..!!!

samantha akkineni visits tirupati temple

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை. சமந்தாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இருக்கிறார்கள். நாகார்ஜுனா அவர்களின் மகன் நாக சைதன்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

திருமணத்திற்கு பின் தனது கணவருடன் வெளிநாடுகள் சுற்றிவந்தார். சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார் அதில் சர்ச்சைக்குரிய காட்சிகளில் சமந்தா நடித்து இருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது சில தரப்பினர் இடையே பெரும் எதிர்ப்பை சந்தித்தார்.

சமந்தா தற்பொழுது நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாராவும் நடித்துவருகிறார் பாண்டிச்சேரியில் நடந்து முடிந்துள்ளது படப்பிடிப்பு இதற்கிடையில் சமந்தா அவரது கணவர் நாக சைதன்யா இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் தெலுங்கு தேசம் மீடியாக்கள் அறிவித்து வந்தது.

சமந்தா படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார் சில மாதங்கள் ஓய்வு எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார் தனது நண்பர்களுடன் வெளியில் சுற்றி வருவது என்று இருந்த சமந்தா இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். திருப்பதியில் பெருமாளை தரிசித்து விட்டு சமந்தா கோயிலை விட்டு வெளியே வந்ததும் பத்திரிக்கயாளர்கள் ஒன்று கூடி நின்றனர் அப்போது ஒரு பத்திரிக்கையாளர் சமந்தாவிடம் மைக்கை நீட்டி உங்களைப் பற்றி வதந்திகள் வருகிறது அதைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார் அதற்கு கோபமடைந்த சமந்தா கோயிலுக்கு வந்து இருக்கிறேன் புத்தி இருக்கா என்று பத்திரிக்கையாளரை பார்த்து கேட்டு விட்டு வேகமாக சென்றால் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பத்திரிகையாளர் ஒருவரை சமந்தா புத்தி இருக்க என்று கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version