Home NEWS சவப்பெட்டியில் உயிரை கையில் பிடித்து போராடிய சேலம் முதியவர் பாலசுப்பிரமணிய குமார் பரிதாபமாக உயிர் இழந்தார்..!!!

சவப்பெட்டியில் உயிரை கையில் பிடித்து போராடிய சேலம் முதியவர் பாலசுப்பிரமணிய குமார் பரிதாபமாக உயிர் இழந்தார்..!!!

salem oldman balasubrmanaiya kumar died

சில நாட்களுக்கு முன் உயிருடன் இருந்த அண்ணனை சவப்பெட்டியில் வைத்த தம்பி என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் சந்தபட்டியில் வசித்து வந்தவர் தான் பாலசுப்ரமணியம் இவருக்கு வயது 78 ஆகின்றது இவருக்கு சரவணன் என்ற ஒரு சகோதரர் உள்ளார் அவருடைய வயது 70. பாலசுப்ரமணிய குமார் அவர்கள் வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருடைய தம்பி சரவணன் அவர்கள் ஒரு சவப்பெட்டியை ஆர்டர் செய்து தனது அண்ணனின் கைகள் மற்றும் கால்களை கட்டி அந்த சவப்பெட்டியில் வைத்து அனைவருக்கும் தனது அண்ணன் இறந்ததாக தகவல் தெரிவித்துள்ளார். பாலசுப்பிரமணியம் குமார் இறப்பு செய்தியைக் கேள்விப்பட்ட உறவினர்கள் அவர்கள் வீட்டில் குவிய தொடங்கினர். அப்போது சவப்பெட்டிக்குள் இருந்த அவரது உடல் அசைந்ததை பார்த்த உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ந்து போய் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

கிட்டத்தட்ட 5 மணி நேரம் கை கால் அசைக்க முடியாமல் பெட்டிக்குள்ளேயே அவரது உடல் இருந்துள்ளது. இதனை அறிந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து முதலுதவி செய்து அருகில் உள்ள அரசு மருத்துவமனை சேர்த்தனர்.

இந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உயிருடன் இருக்கும் தன் அண்ணனை இப்படி சவப்பெட்டியில் வைக்கலாமா என்று அவரது தம்பியிடம் கேட்டதற்கு ஏன்யா தேவையில்லாமல் கத்துகிட்டு இருக்கீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல உயிர் போய்டும் பொறுத்திரு என்று கூறியிருக்கிறார் தம்பி சரவணன்.

balasubramaniya kumar borther saravanan

இந்நிலையில் சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது பாலசுப்பிரமணிய குமாருக்கு ஆனால் பல மணிநேரம் மருத்துவர்கள் போராடியும் பரிதாபமாக உயிர் இழந்தார் பாலசுப்ரமணிய குமார். மருத்துவர்கள் அவரது உயிரை காப்பதற்காக போராடியும் முடியாமல் போனது.

இந்த சம்பவம் சொத்துக்காக நடந்திருக்குமோ என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். சவப்பெட்டியில் தனது உயிரை காக்க போராடிய பாலசுப்பிரமணிய குமார் தற்பொழுது பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை தந்து உள்ளது.

Exit mobile version