Home CINEMA NEWS சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி…!!!கோபத்தில் ரசிகர்கள்.

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி…!!!கோபத்தில் ரசிகர்கள்.

sai palllavi

தமிழில் மாரி-2 தியா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாய் பல்லவி. தெலுங்கில் பல படங்களில் நடித்து இருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தை தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். தமிழில் அஜித்தின் தங்கை வேடத்தில் லட்சுமி மேனன் நடித்தார். அந்த வேடத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசினார்கள்.

ஹீரோயினுக்கான சம்பளம் தருவதாக கூறியும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இப்போது அந்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில் நாகசைதன்யா சாய்பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட சிரஞ்சீவி பேசும்போது நல்லவேளை போலா ஷங்கர் படத்தில் சாய்பல்லவி நடிக்கவில்லை.

ஏனென்றால் அவருடன் ஜோடியாக நடித்த டூயட் பாடவே நான் விரும்புகிறேன். அவருக்கு அண்ணனாக நடிக்க விருப்பமில்லை என தமாஷாக கூறினார். பின்னர் பேசிய சாய் பல்லவி ரீமேக் படங்களில் நடிக்க எனக்கு கொஞ்சம் பயம் அதனால்தான் போலா ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்தேன். இல்லை என்றால் உங்களுடன் சிரஞ்சீவி நடிக்கும் வாய்ப்பை தவற விடுவேனா..

நான் எங்கு சென்றாலும் சிரஞ்சீவியை சந்தித்தீர்களா என்று கேட்கிறார்கள். ராம் சரணை சந்தித்த போது உங்களை எப்போது பார்ப்பேன் என்று எனக்கு நானே கேட்பேன் உங்களுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு பெருமை சார் என்றார்.

Exit mobile version