Home NEWS விடைபெறுகிறார் ஒரு நேர்மையான தமிழ்நாட்டு அதிகாரி சகாயம் ஐஏஎஸ் ..!!! இனி இளைஞர்களை ஊக்குவிக்க...

விடைபெறுகிறார் ஒரு நேர்மையான தமிழ்நாட்டு அதிகாரி சகாயம் ஐஏஎஸ் ..!!! இனி இளைஞர்களை ஊக்குவிக்க போவதாக தகவல்.

sagayam IAS

தமிழக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அளித்திருந்த விருப்ப ஓய்வு கடிதத்தை ஏற்று பணியில் இருந்து அவரை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யூ.சகாயம் கடந்த 1962-ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி பிறந்தவர் 2001 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரி ஆக தமிழ அரசு பணிக்கு நியமிக்கப்பட்டார்.

நாமக்கல் மதுரை மாவட்ட கலெக்டராக அவர் பணியாற்றி உள்ளார் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து இருக்கிறார். மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிரானைட் கனிம வள முறைகேட்டை வெளியே கொண்டு வந்து பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த முறைகேடு பற்றி விசாரிப்பதற்காக சகாயத்தின் தலைமையில் விசாரணைக் குழுவை சென்னை ஹைகோர்ட் அமர்த்தியது.

கிரானைட் முறைகேடு பற்றி முழுமையாக விசாரித்து அது பற்றிய அறிக்கை ஐகோர்ட்டில் அவர் சமர்ப்பித்தார். ஊழலுக்கு எதிரான அவரது பேச்சு பல தரப்பினரை வெகுவாக கவர்ந்தது இந்நிலையில் 2011ஆம் ஆண்டு இந்தியில் உள்ள அறிவியல் நகர துணைத் தலைவராக சகாயம் நியமிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு பணியிடமாற்றம் எதுவும் அளிக்கப்படவில்லை போன வருடம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தமிழக அரசுக்கு சகாயம் ராஜினாமா கடிதம் அளித்தார்.

ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருந்தது. மறுபடியும் சகாயம் அவர்கள் அரசுக்கு நினைவூட்டும் கடிதம் ஒன்றை எழுதினார். தற்பொழுது அவரது விருப்ப ஓய்வு கடிதத்தை ஏற்று இரண்டாம் தேதி பணிவிடுப்பு கடிதத்தை தமிழக அரசு அளித்தது. இன்னும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு இருந்தும் அவர் விருப்ப ஓய்வு பெற்று இருப்பது அரசு வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது திரு சகாயம் ஐபிஎஸ் அவர்கள் இளைஞர்களை நல்வழிக்கு ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Exit mobile version