Home NEWS அரசு வேலையை தூக்கி எறிந்த சபரிமலா எடுத்த அதிரடி முடிவு..!! என்ன தெரியுமா..!!

அரசு வேலையை தூக்கி எறிந்த சபரிமலா எடுத்த அதிரடி முடிவு..!! என்ன தெரியுமா..!!

சபரிமாலா இவர் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எல்இடி அரசு நடுநிலைப் பள்ளியில் மற்றும் திண்டிவனம் அருகே உள்ள வைரவபுரம் கிராம அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தன் அரசு ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சமூகப் பணியில் ஈடுபட்டார். . அதனைத் தொடர்ந்து சமூக பிரச்சனைகளில் கவனம் செலுத்திய சபரிமாலா நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழி மீது உள்ள தீராத காதலால் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு தன்னுடைய கருத்தை எடுத்து உரைப்பதும் மக்களிடம் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வதும் வழக்கமாக வைத்திருந்தார்.

இவருக்கு பல அரசியல் அமைப்புகளில் இருந்து கட்சியில் சேர அழைப்புகள் வந்து கொண்டிருந்தது. வெகு வருடங்கள் அமைதி காத்த சபரிமாலா தற்பொழுது புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார் அந்த கட்சியின் பெயர் பெண்கள் விடுதலை கட்சி இன்று அறிவித்துள்ளார்.

பெண்கள் என்றாலே குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இயந்திரம் என்றும் சமையலறையில் பணியாற்றும் பொம்மைகள் என்றும் நினைக்கும் எண்ணங்களை உடைத்தெறிய துணைநிற்கும் இந்த கட்சி என்று கூறியுள்ளார். ஒரு சமூக பாவலர் கட்சி தொடங்குவது வரவேற்கக் கூடிய ஒன்றுதான். புதிய கட்சியை ஆரம்பித்த சபரிமாலா அவருக்கு வாழ்த்துக்கள்.

Exit mobile version