Home CINEMA NEWS மகனை தூக்கி நிறுத்திய தந்தைக்கு வயது 77. விஜயின் தனத்தை SAC பிறந்தநாளை எப்படி கொண்டாடி...

மகனை தூக்கி நிறுத்திய தந்தைக்கு வயது 77. விஜயின் தனத்தை SAC பிறந்தநாளை எப்படி கொண்டாடி உள்ளார் பாருங்களேன்..!!!

SAC Birthday Celebration

தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இன்று தனது 77வது பிறந்தநாளை தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

எஸ் ஏ சந்திரசேகர் 1928ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களை இயக்கி மக்களிடம் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயகாந்த் என்று பல பிரபலங்கள் நடித்த ஹிட் படங்கள் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்திலும் நடித்த படங்களும் உண்டு.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் SA சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தனது மகன் விஜய்யை டாக்டராக நினைத்த SACயிடம் விஜய் நான் நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொல்ல முதலில் மறுத்துள்ளார் SAC . அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை விஜய் நடித்துக் காட்ட சரி நடிகனாக ஆசைப்படுகிறாய் உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டு தனது மகனுக்கு பக்கத் துணையாக இருந்து சினிமாவில் அறிமுகம் செய்து உள்ளார்.

எஸ்ஏசி தன் மகனை இவரெல்லாம் ஹீரோவா இந்த மூஞ்ச எப்படி ஹீரோவா பார்க்கிறது என்றெல்லாம் விமர்சனம் செய்த போது துணை நின்று விமர்சனத்தை எதிர்கொண்டவர். அதுபோல விஜய்யின் ரசிகர் மன்றத்தை ஆரம்பகாலத்தில் கட்டுக்கோப்பாக கொண்டு சென்றது SAC அவர்கள் தான். என்ன தான் விஜய்க்கும் அவருக்கும் சில பிரச்சனைகளால் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தாலும் அப்பாவை விஜயும் விட்டுக்கொடுத்ததில்லை.

SAC விஜய்யை விட்டுக் கொடுத்ததே இல்லை இன்று எஸ்ஏசி அவர்களின் 75வது பிறந்த நாளை தனது அன்பு மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Exit mobile version