Home NEWS காமராஜர் பிறந்தநாளில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்…!!! ஆனால் இது கட்டாயம்.?

காமராஜர் பிறந்தநாளில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்…!!! ஆனால் இது கட்டாயம்.?

kamarajar

காமராஜர் பிறந்தநாள் ஜூலை 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த தினத்தில் தமிழக அரசு அறிவித்த கல்லூரி மாணவிகளுக்கான ரூ. 1000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

அதில் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்களில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல முக்கிய திட்டங்கள் குறித்து அறிவிப்பினை வெளியிட்டார். அப்போது கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் அரசுப்பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வியில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்காக மாதம் ரூ. 1000 அளிக்கப்படும் என அறிவித்தார்.

இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் பட்டப்படிப்பு, தொழில்படிப்பு ஆகியவற்றில் படிக்கும் காலங்களில் மாதம் ரூ. ஆயிரம் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. மேலும் அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படைத்தோரின் விவரங்களை சேகரித்து வருகிறது.

வரும் புதிய கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும் உதவித்தொகை வழங்கும் பணியை மேற்கொள்ள போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஜூலை மாதம் 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version