Home CINEMA NEWS இரண்டே வாரத்தில் 1000 கோடி வசூல் சாதனை படைத்த RRR திரைப்படம்…!!! வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட...

இரண்டே வாரத்தில் 1000 கோடி வசூல் சாதனை படைத்த RRR திரைப்படம்…!!! வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்..

RRR movie

சமீபத்தில் வெளியான பிரமாண்ட இயக்குனரின் RRR திரைப்படம் இதுவரை 1000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. RRR திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட பாகுபலி படத்தின் இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம் ஆகும். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பல பிரம்மாண்ட படங்களை கொடுத்த ராஜமவுலி பாகுபலி, மாவீரன் படங்களைத் தொடர்ந்து RRR திரைப்படத்தையும் பிரம்மாண்டமாக இயக்கி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். RRR திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்த இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களான ராம ராஜு மற்றும் பீமன் வாழ்க்கையை பற்றிய கதையாகும். இப்படத்தை டிடிவி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் 550 கோடி செலவில் தயாரித்தது. இப்படத்தின் தமிழக வெளியிட்ட பிரபல லைகா நிறுவனம் தட்டிச் சென்றது. இந்த படத்தில் 3டி தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது.

மேலும் பாகுபலி படத்தின் வசூல் சாதனையை வெளியான சில நாட்களிலேயே கடந்துவிட்டது. இப்படம் தற்போது உலகம் முழுவதும் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சக்ஸஸ் மீட்டில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version