Home CINEMA NEWS விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்ணம்மா…!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்ணம்மா…!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

roshini haripriya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்ற சீரியலாக பாரதிகண்ணம்மா சீரியல் உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோயின் கண்ணம்மா ரோலில் நடிப்பவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் கணவருடன் சண்டை போட்டுவிட்டு வந்து தனியாக உழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். கண்ணம்மா இருவரும் ஒன்று சேர வாய்ப்பு இருப்பது போன்ற காட்சிகள் சமீபத்திய எபிசோடுகளில் காட்டப்பட்டு வருகிறது.

இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் பேக் எடுத்துக் கொண்டு நடந்து செல்லும் காட்சி மீம்ஸ் தியேட்டர்களுக்கு விருந்தாக அமைந்து பல மீம்ஸ்களை வெளியிட்டனர்.

இதன்மூலம் ரோஷினி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த மீம்ஸ் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. சேலை அணிந்து மிகவும் எளிமையான தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். ரோஷினி இவர் சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து கண்ணம்மா விலகியதாக செய்திகள் பரவி வருகிறது. அதற்கு ரோஷினி வெள்ளித்திரையில் நடக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அதனால் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலக்கி இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. நடிகை ரோஷினி என் ரசிகர்கள் விரைவில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் பெரிய அளவில் காணப்படுகிறது.

Exit mobile version