Home NEWS அரிசி கழுவும் நீரை இனிமேல் இதற்கெல்லாம் பயன்படுத்துங்கள்…! இதில் இவ்வளவு இருக்கா…?

அரிசி கழுவும் நீரை இனிமேல் இதற்கெல்லாம் பயன்படுத்துங்கள்…! இதில் இவ்வளவு இருக்கா…?

தமிழக உணவு முறையை மிகவும் அவசியமானது அரிசி, தற்போது இடையில் வந்தது தான் கோதுமை, தானிய வகை எல்லாம், மனிதன் ஆரம்பகாலத்தில் அரிசியை தான் சாப்பிட்டு வந்தான் என்பதற்கு பல சாட்சிகள் நம் வரலாற்றில் உள்ளன. மேலும் அப்போது இந்த சர்க்கரை நோயும் வரவில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

நாம் சாப்பிடும் அரிசியை கழுவிய பின்பு தான் வேகவைத்து உண்போம். இந்த அரிசி கழுவிய நீரை என்ன செய்வது என்று பலரும் தெரியாமல் இருக்கும்.

இந்த அரிசி கழுவிய நீரில் நிறைய கார்போஹைடிரேட்டுகள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இது அழகை பாதுகாக்கும் கருவியாக பயன்படுகிறது. தினமும் ஒரு முறை இந்த நீரால் நம் முகத்தை கழுவலாம். மேலும் இவ்வாறு கழுவும் போது முக பருக்கள் வராது, தளர்ந்திருக்கும் சருமத்தை இருக்க செய்கிறது.

700712075

அரிசி கழுவிய நீரை ஒரு துணையால் மூழ்கி எடுத்து துடைத்து எடுக்கலாம். சருமம் தானாக காய்ந்து விடும், கூந்தலில் ஒரு தடவை அலசி, சிறிது நேரம் வைத்திருந்து பின்பு அலசலாம். இதனால் கூந்தல் மென்மையாகவும், வர்ச்சியின்றியும் காணப்பட்டு, இயற்கை நிறத்துடனும், வலுவாகவும் நீளமாகவும் இருக்கும்.

இந்த நீரை அப்படியே குடிக்க கூடாது, வடித்த கன்ஜயோடு சேர்த்து குடித்தால் சத்துக்கள் அப்படியே வந்து நம் உடலுக்கு சேரும். மேலும் குழந்தைகளை குளிப்பாட்டும் போது சிறிது இதே நீரையும் வெண்ணீரோடு சேர்த்து குளிப்பாட்டினால் கை கால் வழியின்றி நல்ல உறக்கம் ஏற்படும். மேலும் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் ஏதும் ஏற்படாது.

இனிமேல் இந்த நீரை கீழே ஊற்றாமல் உபயோகிக்க முயற்சி செய்யுங்கள்.

Exit mobile version