Home NEWS 950 குழந்தைகளை காப்பாற்றிய சிங்க பெண் ரேகா..!!! சிங்கபெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்..!!!

950 குழந்தைகளை காப்பாற்றிய சிங்க பெண் ரேகா..!!! சிங்கபெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்..!!!

rekha mishra save 950 childrens from kidnappers

ஒரு பெண்ணாக இருந்து என்ன சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை தூக்கிப் போட்டுவிட்டு சிங்கம் போல செயல்பட்டு 950 குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்றிய ஒரு பெண் காவலர் தான் ரேகா மிஸ்ரா.

ரேகா மிஸ்ரா புகழ்பெற்ற சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தல் செய்பவரிடம் இருந்து தடுக்கும் பொறுப்பில் இருந்தார்.

மும்பையை பொறுத்தவரை அடிக்கடி குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடத்தல்காரர்களிடம் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க தனிப்படை அமைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு திட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது இருந்தாலும் அதை மீறி பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

 rekha mishra got Nari Shakti Puraskar award in 2017

ரேகா மிஸ்ரா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தைரியமாக செயல்பட்டு பல கடத்தல்காரர்களிடமிருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்றியுள்ளார்.

15 வயது சிறுமியை 45 வயது கொண்ட ஒருவர் கடத்தி சென்று உள்ளார் அதனைப் பார்த்த ரேகா மிஸ்ரா குழந்தையை கடத்தி செல்லும் நபர் சிறுமியை ரயிலில் ஏற்றும்போது சிறுமியின் கையை பிடித்து அவளை சிறுத்தையின் அதன்பின் என் குழுவினர் கடத்தல்காரர்களை சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.

அந்த சிறுமி கண்ணீர் விட்டு கதறி அழுது என்னை காப்பாற்றியதற்கு நன்றி என்று கூறினாள் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுவரை ரேகா மிஸ்ரா 950 குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்றி உள்ளார். இந்த பெண்ணை வாழ்த்தலாமே.

Exit mobile version