Home CINEMA NEWS சமந்தாவை போல் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடிய ரெஜினா…!!!

சமந்தாவை போல் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடிய ரெஜினா…!!!

regina

சமந்தா பாணியில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார் ரெஜினா. புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா கிளாமராக நடனம் ஆடியிருந்தார்.

இந்த பாடலின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. அதே சமயம், இந்த பாடல் மிகவும் பிரபலமானது. அந்த வகையில் இப்போது ரெஜினாவும் ஒரு பாடலுக்கு கிளாமர் நடனம் ஆடியுள்ளார்.

சிரஞ்சீவி, ராம்சரண், சுஜால் அகர்வால் நடித்து வரும் படம் ஆச்சார்யா. இந்த படத்தில் ‘சானா கஸ்டம்’ என தொடங்கும் பாடலில் ரெஜினா ஆடிப்பாடும் காட்சி இடம்பெறுகிறது. சமீபத்தில் இந்த பாடலின் வீடியோ, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் சமந்தாவை விட அதிகமாக கவர்ச்சி காட்டி ரெஜினா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் படங்களில் ஹோம்லி வேடங்கள் மட்டுமே நடித்து வந்தவர் ரெஜினா.

இந்நிலையில் இவர் இப்படி நடித்திருக்கிறாரே என ரசிகர்கள் கமென்ட் போட்டு வருகின்றனர்.

Exit mobile version