Home CINEMA NEWS இப்படி இருந்த ரம்யாபாண்டியன் இப்போ இப்படி மாறிட்டாரே..!!! இணையத்தில் பரவி வரும் புகைப்படங்கள்.

இப்படி இருந்த ரம்யாபாண்டியன் இப்போ இப்படி மாறிட்டாரே..!!! இணையத்தில் பரவி வரும் புகைப்படங்கள்.

ramya pandian photoshoot

ரம்யா பாண்டியன் ஒரே போட்டோஷுட்டில் ஓஹோவென்று பிரபலமடைந்த நடிகை. நடிகைகள் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டு வருவார்கள் அதில் ஏதாவது ஒன்று பெரிய வைரலாகி நடிகைகளுக்கு விளம்பரத்தை தேடித்தரும் அதுபோல ரம்யா பாண்டியன் போட்டோஷூட் புகைப்படங்கள் ஒரு நேரத்தில் செம வைரலானது.

ரம்யா பாண்டியன் நடிகர் அருண் பாண்டியன் அவர்களின் அண்ணன் மகள். இவர் முதன்முதலில் டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்திருந்தார் அதனைத்தொடர்ந்து பல விருதுகளைப் பெற்ற ஜோக்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். சமுத்திரக்கனி அவருக்கு ஜோடியாக ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை நல்ல படம் என்றாலும் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கவில்லை.

ஏதாவது போட்டோ ஷூட் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டு வந்து கொண்டிருந்தார் அப்போது பச்சை நிற சேலையில் இடுப்பு தெரியும் படி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரல் ஆனது.

ரம்யா பாண்டியன் ஒரே போட்டோ ஷூட்டில் பிரபலமடைந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 கலந்துகொண்டு மூன்றாவது இடத்தையும் பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமடைந்து மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார் ரம்யா.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரம்யா பாண்டியன் மற்றொரு போட்டோஷூட் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது அதில் ரம்யா கொடுத்த போஸை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் முன்னாடி வரைக்கும் நீ பெஸ்ட் பிக்பாஸ் அப்புறம் தான் தெரியுது நீ ஒர்ஸ்ட் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இருந்தாலும் பலர் ரம்யாவின் புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளி குவிக்கின்றனர். சில வருடங்களுக்கு முன் இப்படி இருந்த ரம்யா பாண்டியனுக்கு இப்போ இவ்வளவு ரசிகர்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

திறமைக்கு அழகு தேவை இல்லை என்றாலும் கவர்ச்சி வேண்டாம் ரம்யா.

Exit mobile version