Home NEWS வா தலைவா நாங்க இருக்கோம்..!!! உங்கள் முடிவு எங்களுக்கு மாரடைப்பு வந்தது போல இருக்கிறது...

வா தலைவா நாங்க இருக்கோம்..!!! உங்கள் முடிவு எங்களுக்கு மாரடைப்பு வந்தது போல இருக்கிறது ரஜினி ரசிகர்கள் உருக்கம்.

rajini health condition

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறி கட்சி தொடங்குவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். என் கட்சியில் சேர்ந்தால் பணம் சம்பாதிக்க முடியாது மக்களுக்கு சேவை மட்டுமே செய்ய முடியும் என்று அறிவித்திருந்த ரஜினி தன் கட்சியை வழிநடத்த முக்கிய தலைவர்களை தேர்ந்தெடுத்தார். தேர்ந்தெடுத்த கையோடு அவர்களை அறிமுகமும் செய்து வைத்தார்.

பாஜகவின் பெரிய பொறுப்பில் இருந்த ஒருவர் ரஜினியை நம்பி அந்த பதவியில் இருந்து விலகி மக்களுக்கு நல்லது செய்வதற்காக ரஜினி கட்சியில் இணைந்தார். கட்சிப் பணிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க ரஜினி ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படப்பிடிப்பு தளத்தில் நாலுபேருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டதால் ரஜினியையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு இயக்குனர் சிறுத்தை சிவா அறிவுறுத்தியுள்ளார் அதன்பின் ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை செய்திருக்கிறார் அதில் நெகட்டிவ் என்று வந்துள்ளது ஆனால் உடல்நலம் சற்று சரியில்லாதது போல் இருந்தவுடன் உடல் பரிசோதனை செய்துள்ளார் ரஜினி அப்பொழுது ரஜினிக்கு இரத்த கொதிப்பு அதிகமாக இருந்துள்ளது. மருத்துவர்கள் ரஜினியின் பரிசோதனை முடிவுகளை பார்த்தபின் கண்டிப்பாக ஒரு ஓய்வு எடுக்க வேண்டும் இல்லை என்றால் அது அவர் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று ரஜினி மற்றும் அவரது மகள் சௌந்தர்யாவிடம் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இரத்த கொதிப்பின் ஏற்றத்தாழ்வு சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர் உடல் நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காரணத்தினால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பை அறிவித்திருந்தார்.

இந்த செய்தி வந்த நாளில் இருந்து இன்று வரை அவரது ரசிகர்கள் ரஜினி வீட்டின் முன்பு உட்கார்ந்து தலைவா வெளியில் வா என்று கோஷங்கள் எழுப்பி தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் வருத்தத்துடன் கோஷமிட்டு வருகின்றனர். நீங்கள் அரசியலுக்கு வந்தா மட்டும் போதும் மற்றவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்கிறோம் என்றெல்லாம் கோஷமிட்டு வந்தனர். உங்கள் முடிவு எங்களுக்கு மாரடைப்பு வந்தது போல இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை என்று அறிக்கை வெளியிட்டதற்கு மீடியாக்களில் இறக்கம் தெரிவித்தும் மற்றொரு பக்கம் ரஜினியை கலாய்க்கும் வீடியோக்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது இந்நிலையில் மூன்று நாட்களாக ரஜினி வீட்டிற்கு முன்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மூன்று நாட்களாகியும் வீட்டிற்கு செல்லாமல் அவரது ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு வாசலில் தரையில் அமர்ந்து தலைவா வா என்று கோஷமிட்டு வருகின்றனர் ஆனால் ரஜினி கேளம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் தற்பொழுது ரஜினியின் உடல்நிலை மிகவும் முக்கியம் அவர் அரசியலுக்கு வருவதை விட அவர் நன்றாக இருந்தால் தானே மற்ற முடிவுகளை அவரால் துணிச்சலாக எடுக்க முடியும் அவருக்கு உடல்நிலை சரிப்பட்டு வராததால் அவர் ஏற்கனவே மன வேதனையில் உள்ளார் இந்நேரத்தில் மேலும் அவரது ரசிகர்கள் அவரை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது என்று கூறி வருகிறார்கள் சினி வட்டாரத்தில்.

Exit mobile version