Home NEWS கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன்,கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை..!

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன்,கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை..!

தேசிய விளையாட்டு விருதுக்கான தேர்வுக் குழு கடந்த செவ்வாய்க்கிழமையன்று ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுக்கு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக நான்கு விளையாட்டு வீரர்களில் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

1998 ஆம் ஆண்டு முதன் முறையாக சச்சின் டெண்டுல்கருக்கும், 2007 ஆம் ஆண்டு எம்எஸ் தோனிக்கும், 2018 ஆம் ஆண்டு விராட் கோலிக்கும் இந்த ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டின் முதல் பெண் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதைப்போல அதே ஆண்டில் காமன்வெல்த் மட்டும் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு மணிகா பத்ரா தங்கம் மற்றும் வெண்கலம் வென்று இருந்தார்.

இதனை அடுத்து மாற்றுத்திறனாளிக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றுள்ளார். அதனால் அவருக்கு 2019 கேல் ரத்னா விருதை மாற்றுத் திறனாளி வீராங்கனை தீபா மாலிக் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வென்று இருந்தனர்.

தற்போது இந்த வரிசையில் டெல்லியில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, குத்துச் சண்டை வீரர் விக்னேஷ் போகட், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிகா பத்ரா ஆகியோரின் பெயர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version