Home CINEMA NEWS அண்ணாத்த ஓப்பனிங் சாங் தியேட்டரை அதகளம் செய்த குட்டீஸ்..!!! அடேங்கப்பா ரஜினி மேல இவ்வளவு...

அண்ணாத்த ஓப்பனிங் சாங் தியேட்டரை அதகளம் செய்த குட்டீஸ்..!!! அடேங்கப்பா ரஜினி மேல இவ்வளவு பிரியமா..!!!

annaththe rajini kids fans celebrating movie

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் தான் அண்ணாத்த இந்த படத்தை சிறுத்தை சிவா அவர்கள் இயக்கியிருந்தார்.

அண்ணாத்த திரைப்படம் வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. பலர் இயக்குனர் சிறுத்தை சிவா சரியாக படத்தை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தனர். ரஜினி இந்த வயதிலும் இப்படி நடிப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வந்தனர்.

மாஸ் காட்சிகளிலும் சரி சென்டிமென்ட் காட்சிகளிலும் சரி தனது நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருந்தார். 70 வயது ஆன மனிதர் நடனமாடுகிறார் சிரிக்க வைக்கிறார் மாஸ்க் காட்சிகளில் அதகளம் செய்கிறார் சென்டிமென்ட் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பங்களை கவரும் கதையை தேர்ந்தெடுத்த ரஜினி அனைவரையும் இந்தப்படத்தில் கவர்ந்து இருந்தாலும் இயக்குனர் கொஞ்சம் கதையில் மெனக்கட்டு இருந்தால் இந்தப் படம் ரஜினியின் திரையுலகப் பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்திருக்கும்.

தொடர்ந்து அண்ணாத்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் தியேட்டரில் நாளுக்கு நாள் மக்கள் ரஜினியை பார்ப்பதற்கென்றே படையெடுத்து வருகிறார்கள் மக்கள். குறிப்பாக சக்தி திரையரங்கம் என்ற திரை அரங்கில் அண்ணாத்த திரைப்படத்தின் ஓபனிங் சாங் ஒளிபரப்பட்டது அப்போது குழந்தைகள் ரசித்து நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்றும் குழந்தைகள் ரசிகர்கள் இருப்பதற்கு இதுவே ஒரு சான்று.

Exit mobile version