Home CINEMA NEWS புஷ்பா படம் எப்படி இருக்கு…!!! பில்டப் கொடுத்த அளவுக்கு படம் சரி இல்லைன்னு புலம்பும் ரசிகர்கள்.

புஷ்பா படம் எப்படி இருக்கு…!!! பில்டப் கொடுத்த அளவுக்கு படம் சரி இல்லைன்னு புலம்பும் ரசிகர்கள்.

pushpa movie

ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புஷ்பா திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா: தி ரைஸ். இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது. மேலும் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அஜய் கோஷ் போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும்பாலான காட்சிகள் மதுரை சுற்றி உள்ள வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். புஷ்பா தி ரைஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ஆம் தேதி இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.

புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் கெட்டப் கேஸ்டிங், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சந்தன மரம் கடத்தும் லாரி டிரைவர்களின் தலைவனாக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் ஹேர்ஸ்டைல், பாடி லாங்குவேஜ், பேச்சு என அனைத்தும் நிஜ லாரி டிரைவர் ஆகவே வாழ்ந்துள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் உழைப்பு நன்றாக தெரிகிறது. ஆனால் அல்லு அர்ஜுன் காண்பித்து அளவிற்கு கதையிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குனர் சுகுமார்.

படம் முழுக்க முழுக்க ஹீரோ பில்டப் கொடுக்கும் காட்சியாகவே அமைந்துள்ளது. தமிழில் வெளியான கைதி திரைப்படத்தில் சண்டை காட்சிகள் போலவே பல இடங்களில் காணலாம். சந்தன மரம் எப்படி கடத்தப்படுகிறது என்ற காட்சி நன்றாக இருந்தாலும் இன்னும் கூடுதலாக தகவலை தெரிவித்து இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். போலீஸ்காரர் லாரியை சேஸ் செய்யும் போது உடனே லாரியை காட்டுக்குள் மறைக்கிறார் அல்லு அர்ஜுன். இன்னும் கொஞ்சம் கூடுதலான போலீசை வைத்து தேடி இருந்தால் லாரியை கண்டுபிடித்து இருக்கலாம்.

ஆனால் அப்படி செய்யாமல் ஹீரோவிற்கு மேலும் பில்டப் சீன்கள் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து நிறைய சந்தன மரத்துடன் சென்ற லாரி திடீரென மரக்கட்டைகளை தண்ணீரில் தள்ளிவிடும் காட்சியில் சற்றே லாஜிக் இல்லாமலேயே தெரிகிறது. ராஸ்மிகா மந்தானா இந்த படத்தில் எதற்கு வருகிறார் போகிறார் என்று தெரியவில்லை. அதோடு இந்த கதையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று குழப்பம் படம் தொடக்கத்திலேயே தெரிகிறது.

ராஷ்மிகாவிற்கு இந்தப் படத்தில் எந்த ஒரு அழுத்தமான காட்சிகளும் கொடுக்கப்படவில்லை. புஷ்பா திரைப்படத்தில் வில்லன்கள் அனைவரும் தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் ஆகவே தெரிகிறது. இப்படத்தில் ஃபகத் பாசில் முதல் காட்சியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் போகப் போக அவருடைய கதாபாத்திரமும் பெரியதாக எடுபடவில்லை. அதோடு சமந்தா ஒரு பாடலுக்கு வந்தாலும் நல்ல ஒரு குத்தாட்டம் போட்டு சென்றுள்ளார்.

மேலும் ஓ சொல்றியா மாமா மற்றும் சாமி பாடல்கள் வரும்போது திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மற்ற பாடல்கள் தமிழில் பெரிய அளவில் எடுபடவில்லை என்று சொல்லலாம். தமிழில் நேரடி படம் என்றாலும் அது டப்பிங் படம் போலவே மக்களுக்கு உணருகிறது. படத்தில் யாருக்குமே லிப் சின்க் சரியாக பொருந்தவில்லை. புஷ்பா திரைப்படத்தை இன்னும் கூடுதலாக சுவாரசியம் கலந்து கொடுத்து இருந்தால் படம் சிறப்பாக இருந்துருக்கும்.

Exit mobile version