Home NEWS ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!!!

ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!!!

psbb school teacher rajagopalan

சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியரை தமிழக அரசு தற்போது கைது செய்துள்ளது.

மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும் பொழுது இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஆசிரியர் நிற்பார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து வெளிவந்த கடித்ததால் பரபரப்பு.

சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவரை பற்றி அந்தப் பள்ளியின் டீன் ஷீலா ராஜேந்திரன் அவர்களுக்கு ஒரு முன்னாள் மாணவர்கள் அமைப்பு எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்தில் வணிகம் மற்றும் கணக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ராஜகோபாலன் இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசையாக பணியாற்றி வருகிறார் இவர் மீது ஏற்கனவே பல புகார்களை மாணவிகள் முன்வைத்துள்ளனர். பாடம் நடத்தும் போது மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது பாலியல் தொடர்பாக பேசிய அவர்களை தர்மசங்கடத்திற்கு அழகு வழியே வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் ராஜகோபாலன்.

ராஜகோபால் அவனைப்பற்றி மாணவிகள் தங்களது பள்ளி நிர்வாகத்திடம் மற்றும் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர் உடனே பள்ளி நிர்வாகம் அவரை கூப்பிடடு கண்டித்து அனுப்பி உள்ளார்கள். அதன்பின் மாணவிகளிடம் சென்று என்னை பற்றி புகார் கொடுத்தால் உங்கள் மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஆன்லைன் வகுப்பில் இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு மாணவிகள் முன் நின்றுள்ளார். மாணவிகள் வாட்ஸப் நம்பருக்கு அவர்களின் உடலமைப்பைப் பற்றி கமெண்ட் செய்து மெசேஜ் அனுப்பி உள்ளார் ராஜகோபாலன்.

இது குறித்து ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளன அந்த கடிதத்தை படித்த பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இது குறித்து கனிமொழி அவர்கள் கூறியது:

பி.எஸ்.பி.பி பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்குள்ளான ஆசிரியரை உடனடியாக கைது செய்த தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் எனது நன்றி. அதேசமயம் இதை கண்டுகொள்ளாமல் விட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும். தேசிய பாலியல் குற்றவாளிகள் பட்டியலை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடுவதால் இது போன்ற குற்றவாளிகள் மீண்டும் குழந்தைகள்/சிறுவர்கள் இருக்கும் இடங்களில் பணிக்கு சேர்வது தடுக்கப்படும்.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள் அப்படிப்பட்ட குருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற ஆசிரியர்களை என்னவென்று சொல்வது.

Exit mobile version