Home CINEMA NEWS மாடர்ன் உடையில் அசத்தும் பிரியா பவனி ஷங்கர்..!!! புகைப்படங்கள் உள்ளே.

மாடர்ன் உடையில் அசத்தும் பிரியா பவனி ஷங்கர்..!!! புகைப்படங்கள் உள்ளே.

modern priyabhavanishankar

தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக பல ஹீரோயின்கள் காத்துக்கிடக்கும் இந்த நேரத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியா பவானி சங்கர். முதலில் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடங்கிய இவர் விஜய் டிவியில் கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானார்.

அந்த சீரியலை பார்ப்பதற்கு பிரியாவும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தார். பிரியாவின் முகபாவனைகள் மற்றும் அவர் அணிந்திருக்கும் உடைகள் அனைத்தும் பல தரப்பு ரசிகர்களை கவர்ந்தது. அதனைத்தொடர்ந்து “மேயாத மான்” என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் பிரியா. அந்தப் படம் தளபதி விஜயின் மெர்சல் படத்துடன் வெளியானதால் அந்தப் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை இருந்தாலும் ரீ ரிலீஸ் செய்த பின் அந்தப் படத்திற்கு கிடைத்தது நல்ல வரவேற்பு.

SJ சூர்யாவுடன் நடிக்க தயங்கும் ஹீரோயின்கள் மத்தியில் பிரியா தைரியமாக SJ சூர்யாவுடன் “மான்ஸ்டர்” என்ற படத்தில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க தொடங்கினர் பிரியா. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த “மாஃபியா” படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெலிப்படுத்தினர்.

இணையத்தில் ப்ரியாவின் மாடர்ன் புகைப்படங்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஹோம்லி மட்டும் அல்ல பிரியாவிற்கு மாடர்ன் உடையும் பொருந்தும் என்கிற வகையில் உள்ளது அந்த புகைப்படங்கள் இதோ.

Exit mobile version