Home CINEMA NEWS பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர்க்கு பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணுடன் திருமணமா…? அவர்களே வெளியிட்ட...

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர்க்கு பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணுடன் திருமணமா…? அவர்களே வெளியிட்ட தகவல் இதோ.

harish hearts priya

பிரியா பவானி சங்கர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன்பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் ஹோம்லியான ரோலில் நடித்து மக்களின் மனதைக் கவர்ந்த இவர். ஒரே சீரியலில் பிரபலமாகி தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

பிரியாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தாலும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தார். “மேயாத மான்” என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமான பிரியா அந்தப் படத்தில் அருமையாக நடித்திருந்தார். படத்தைப் பார்த்து தளபதி விஜய் பிரியாவை புகழ்ந்து தள்ளியது அனைவரும் அறிந்ததே.

பிரியா செய்தி வாசிப்பாளராக இருந்த போதே ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார். அவருடன் தான் திருமணம் என்று அதிகாரபூர்வமாக பல பேட்டிகளில் கூறி இருந்தார். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நேற்று போட்ட ட்வீட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கர் நெருக்கமாக இருப்பது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இறுதியாக எங்களுக்கு மகிழ்ச்சி என்று ஹார்ட்டின் போட்டு இருந்தார்.

ஹரிஷ் ஹாட்ஸ் ப்ரியா எண்ட ஹாஷ்டாக் ஒன்றை போட்டிருந்தார் ஹரிஷ் கல்யாண். அதனைத்தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் லாக்டோன் முடிகிற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியலையா. நான் தான் இதனை முதன் முதலில் வெளியில் சொல்லலாம் என்று இருந்தேன் என்று கூறினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினர்.

உண்மை என்ன என்றால் தெலுங்குவில் விஜய் தேவர்கொண்டா நடித்து ஹிட்டான “pellichoopulu” படத்தின் ரீமேக்கில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது ஆனால் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்கள் எதைப்பற்றி என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

Exit mobile version