Home NEWS கணவன் நின்று அமோக வெற்றி பெற்ற தொகுதியில் பின்னடைவில் பிரேமலதா..!!! கவலையில் தேமுதிகவினர்..!!!

கணவன் நின்று அமோக வெற்றி பெற்ற தொகுதியில் பின்னடைவில் பிரேமலதா..!!! கவலையில் தேமுதிகவினர்..!!!

premalatha vijayakanth

விஜயகாந்த் நின்று ஜெயித்த தொகுதியில் இன்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

கேப்டன் விஜயகாந்த் மக்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அரசியல் கட்சித் தலைவர் நடிகர் என்பதை தாண்டி அவர் மக்களை கருத்தில் கொண்டு நிறைய நல்லது செய்வார் என்று மக்கள் பெரிதாக எதிர்பார்த்தனர்.

விஜயகாந்த் அவர்கள் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி தொடங்கிய முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். விஜயகாந்தின் வாக்கு எண்ணிக்கையை பார்த்த மற்ற கட்சி தலைவர்கள் விஜயகாந்தின் பவரை பார்த்து அசந்து போனார்கள்.

அதிமுக கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி வைக்க விரும்பினார். 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்த் அந்த தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக அவதாரம் எடுத்தார். அதன்பின் செல்வி ஜெயலலிதா அவர்களையே சட்டசபையில் எதிர்த்து கேள்வி கேட்ட விஜயகாந்த் துணிச்சலை பார்த்து அனைவரும் வியந்தனர்.

உடல்நலக்கறைவால் தற்பொழுது கட்சிக்காக உழைக்க முடியாமல் ஓய்வில் இருக்கும் விஜயகாந்த் தனது கட்சிப் பொறுப்புகளை அவரது மனைவி மற்றும் மகனிடம் ஒப்படைத்தார். இந்த தேர்தலில் கூட்டணிக்கு அதிமுக அழைப்பார்கள் என்று கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தார்கள் இருந்தார்கள் தேமுதிக ஆனால் அதிமுக கடைசிவரை தேமுதிகவை பொருட்டாக நினைக்கவில்லை.

இதனால் டென்ஷனான தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்தார்கள் அதன்பின் தினகரனின் அமுமுக கட்சியுடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்தார்கள்.

விஜயகாந்த் அவர்கள் நின்று ஜெயித்த தொகுதியான விருத்தாச்சலம் தொகுதியில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டார். தற்பொழுது பிரேமலதா விஜயகாந்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கணவர் நின்று ஜெயித்த தொகுதியில் மனைவியால் ஜெயிக்க முடியவில்லையே என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Exit mobile version