Home NEWS பீஸ்ட் படம் பார்க்கவந்த ரசிகர்களுக்கு பெட்ரோல் இலவசம்…!!! கொண்டாட்டத்தில் பொதுமக்கள்.

பீஸ்ட் படம் பார்க்கவந்த ரசிகர்களுக்கு பெட்ரோல் இலவசம்…!!! கொண்டாட்டத்தில் பொதுமக்கள்.

petrol

பீஸ்ட் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக கொடுத்த விஜய் ரசிகர்களுக்கு குவியும் பாராட்டுகள். பெட்ரோல் விற்கும் விலையில் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து சென்றனர்.

மேலும் இலவச பெட்ரோல் கிடைத்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் காணப்பட்டனர். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதனால் படத்தின் கலெக்ஷன் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படம் இன்று வெளியானதையொட்டி விஜய் ரசிகர்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் உள்ள நேஷனல் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாயை தாண்டி உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள், இந்த பரிசு வாங்கிச் சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version