Home CINEMA NEWS அமீர் காதலுக்கு பவானி ரெட்டி குடும்பத்தினர் கொடுத்த ரெஸ்பான்ஸ்…!!! ஒரு வழிய சோலி முடிஞ்சிட்டு..!!! ஒரு...

அமீர் காதலுக்கு பவானி ரெட்டி குடும்பத்தினர் கொடுத்த ரெஸ்பான்ஸ்…!!! ஒரு வழிய சோலி முடிஞ்சிட்டு..!!! ஒரு நேஷனல் டெலிவிஷன் செய்ற வேலையா இது…!!!

biggboss tamil season 5 bhavani reddy ameer

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் அறிமுகமானார் பவானி ரெட்டி சின்னத்தம்பி என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவருக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. பார்க்க ஹோம்லியாக இருந்த பவானி ரெட்டி ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.

தனது கணவனை இழந்த வருத்தத்தில் தனது வாழ்க்கையில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது விஜய் டிவியில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் பவானி ரெட்டி. அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 கலந்துகொண்டார்.

பவானி ரெட்டியுடன் சக போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அமீர் வழக்கம்போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு ஜோடி நல்ல கன்டென்ட் கொடுப்பார்கள் அதுபோல பவானி ரெட்டி இருவரும் பிக் பாஸ் சீசன் 5 இல் நல்ல டைம் பாஸ் செய்தார்கள்.

அமீர் பவானி ரெட்டி நெருக்கமாகப் பழகிய சர்ச்சை வீடியோவும் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு சென்றாலும் ஒன்றாகவே வலம் வந்தனர் இந்த ஜோடிகள்.

அமீர் பவானி ரெட்டியை உருகி உருகி காதலித்து வந்தார் அவருக்காகத்தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று கூறியிருந்தார் ஆனால் பவானி ரெட்டி இன்று வரை அமீரை காதலிப்பதாகச் சொல்லவில்லை.பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அமீரை கேவலப்படுத்திய பவானி ரெட்டி சகோதிரி கண்டித்தும் வந்தார்கள்.

தற்போது அமீர் பவானி ரெட்டி இருவரும் சேர்ந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடி சேர்ந்து நடனம் ஆடியுள்ளனர். அமீர் பவானி ரெட்டி நடனத்தை பார்த்து அசந்து போனார்கள் சிறப்பு விருந்தினர்கள் அந்த அளவிற்கு அருமையாக நடனமாடி வந்தார்கள். இந்த வாரம் பவானியின் குடும்பத்தினர் சர்ப்ரைஸ் விசிட் அடித்து உள்ளனர்.

அந்த ப்ரெமோ தற்போது வெளியாக உள்ளது அதில் பிரியங்கா ஒரு நேஷனல் டெலிவிஷனில் தன்னுடைய காதலை பவானி ரெட்டி இடம் அழகாக கூறினார் அமீர். அது அவருக்கு புரியுதோ இல்லையோ அவங்களோட குடும்பத்தினருக்கு புரிந்து இன்று உன்னை பாராட்டுறாங்க அப்படிங்கிறது சந்தோசமா இருக்குது இதுக்கு முழு காரணமும் நீதான் அமீர் சீக்கிரமாகவே உன் வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று பிரியங்கா வாழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய பவானி ரெட்டி சகோதரி ரொம்ப நன்றி அமீர் என்னுடைய தங்கையை நன்றாகப் புரிந்து வைத்துள்ளீர்கள் என்று உருக்கமாக நன்றி தெரிவித்தார். பவானியின் மற்றொரு சகோதரி அமீர் பவானி ரெட்டி வாழ்க்கையில் ஏஞ்சல் ஆக வந்திருக்கிறார். அவர் பவானியை சிரிக்க வைக்கிறார் சந்தோசமாக வைத்திருக்கிறார் என்று புகழ்ந்து தள்ளினார்.

அதன்பின் அமீருக்கு அழகான வாட்ச் ஒன்றை பரிசாகக் கொடுத்தார்கள் அந்த வாட்சை ராக்கி என்று நினைத்து கட்டி விடுமா என்று பிரியங்கா கலாய்க்க பவானி சிரித்துக்கொண்டே அமீருக்கு அந்த வாட்ச்சை கையில் கட்டிவிட்டார். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரொமான்டிக் காட்சியாக இந்த சம்பவம் நடந்தது.

இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை அமீருக்கு தெரிவித்து வருகின்றனர் சிலர் நேஷனல் டெலிவிஷன் செய்ற வேளையாட இது என்று கலாய்த்து வருகிறார்கள்.

Exit mobile version