Home NEWS சசிகலா வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர்..!!! சின்னம்மா அரசியலுக்கு வர...

சசிகலா வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர்..!!! சின்னம்மா அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை.

sasikala politics

சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த நாட்களில் இருந்து நேற்று வரை சசிகலாவின் அடுத்த அரசியல் நகர்வு என்ன என்று ஆர்வத்தில் இருந்த அவரது தொண்டர்கள். சசிகலா மீண்டும் அரசியலில் இறங்குவார் என்று கூறி வந்த நிலையில் நேற்று திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் சசிகலா.

அந்த அறிக்கையில் நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன். புரட்சித்தலைவி ஜெயலலிதா நமக்கு பொது எதிரி என்று காட்டிய திமுக ஆட்சியில் அமரக்கூடாது புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அம்மாவின் ஆட்சி அமைய கடவுளிடம் பிரார்த்திப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்த அறிக்கை வெளியானதும் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகலாவின் இந்த திடீர் அறிக்கையை பார்த்த சில கட்சி தலைவர்கள் சசிகலாவின் முடிவை வரவேற்றார்கள்.

சசிகலாவின் முடிவால் அதிர்ச்சி அடைந்த ஆதரவாளர்கள் 6 பேர் வசித்து வரும் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆறு பேர் போலீசார் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சசிகலா வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சின்னம்மா அரசியலுக்கு வரவேண்டுமென்று நோக்கத்தோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி வருகின்றனர். முதலில் 6 பேர் ஆரம்பித்த போராட்டத்தில் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக 11 பேர் சேர்ந்தனர்.

Exit mobile version