Home CINEMA NEWS பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு செம நியூஸ்..!!! முதல் முதலாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு செம நியூஸ்..!!! முதல் முதலாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செய்த சாதனை.

pandian stores serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்று மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியலில் ஒன்றாக பெயர் பெற்று வருகிறது.

அச்சு அசல் வானத்தைப்போல மற்றும் ஆனந்தம் படத்தின் டெம்ப்ளேட் என்றாலும் கூட்டுக் குடும்பத்தில் அண்ணன்- தம்பிகள் பாசத்தை அழகாக சொல்லும் கதை என்பதினால் மக்கள் தொடர்ந்து இந்த சீரியலை பார்த்து வந்தனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரியர்களுக்கு ஒரே வருத்தம் சமீபத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா அவர்களின் தற்கொலைத் தான். இந்த தொடரில் சித்ரா முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றார் சமீபத்தில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்றுவரை மக்களால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது.

சித்ராவின் இறப்பிற்குப் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே ஒன்று சேர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி சூட்டிங் ஸ்பாட்டில் அழுது சூட்டிங்கை மறுபடியும் ஆரம்பித்தனர். சமீபத்தில்தான் சித்ராவின் முல்லை கதாபாத்திரத்தில் காவியா என்பவர் நடிக்கத் தொடங்கினார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரியர்களுக்கு ஒரு இன்ப செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மக்களின் பெரும் வரவேற்பு பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பாண்டியா ஸ்டோர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டு ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவியில் ஒரு தமிழ் சீரியல் முதல் முதலாக ரீமேக் செய்யப்படுவது இதுதான் முதல் முறை. ஹிந்தி பாண்டியா ஸ்டோர்ஸ் போஸ்டர் இதோ.

Exit mobile version