Home CINEMA NEWS பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்…!!! யாருனு தெரியும்.. காரணம் என்ன.?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்…!!! யாருனு தெரியும்.. காரணம் என்ன.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் அண்ணன் தம்பி கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடர் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. கூட்டுக் குடும்பத்தை மையமாக க் கொண்டு எடுக்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தொடர் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வருகிறார். அதில் ஜீவா இன்னும் ஒரு இரு எபிசோடுகளில் விலகப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் புதிதாக தொடங்க உள்ள கிழக்கு வாசல் என்ற தொடரில் வெங்கட் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் ராதிகா சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வெங்கட்டுக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோரில் யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜீவா கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் அருண் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்து விடும்.

Exit mobile version