Home NEWS இனி சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை வெளுத்து வாங்கலாம்!!! வந்தாச்சு SUGAR FREE மாம்பழம்.

இனி சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை வெளுத்து வாங்கலாம்!!! வந்தாச்சு SUGAR FREE மாம்பழம்.

Mango

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவைக்கு மயங்காதவர்கள் இல்லை. ஆனால் சக்கரை நோயாளிகளால் அதை தொட்டு பார்க்க கூட முடிவதில்லை. இதில் சர்க்கரை அளவு அதிகம் என்பதால் மருத்துவர்களும் சாப்பிட தடை போட்டு விடுகிறார்கள். சர்க்கரை நோயாளிகளில் இந்த கவலையை உணர்ந்த பாகிஸ்தான் பண்ணையாளர் சுகர் ஃப்ரீ மாம்பழத்தை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளார். கராச்சியைச் சேர்ந்தவர் குலாம் சர்வார் 300 ஏக்கரில் பிரம்மாண்டமான இயற்கை விவசாய பண்ணை பராமரித்து வருகிறார். இந்த பண்ணையில் 44 ரகத்தில் மாம்பழ வகைகள் விளைவிக்கின்றனர். இங்கு மாம்பழம் தொடர்பான பல ஆராய்ச்சிகளையும் இவர் செய்கிறார்.

குறிப்பாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் சொனரோ, க்ளென் மற்றும் கெய்ட், சிந்திரி சவுன்சா மாம்பழங்களில் சக்கரை விகிதத்தை குறைக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்தார். தீவிர முயற்சியின் பலனாக இவற்றில் சக்கரை அளவை மிகப் பெருமளவில் குறைத்து வெற்றி பெற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் பொதுவாக மாம்பழங்களில் 12 – 25 சதவீத சர்க்கரை இருக்கும். இதனாலேயே நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடத் தயங்குகிறார்கள். ஆனால் எனது பண்ணைகளில் விளைவித்த மாம்பழத்தின் 4 – 6 சதவீதம் சர்க்கரை மட்டுமே இருக்கிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரங்கள் ஆகும் என்றார்.

Exit mobile version