Home NEWS இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதி…!!! அதிர்ச்சியில் திரையுலகினர்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதி…!!! அதிர்ச்சியில் திரையுலகினர்.

theatre

தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியா முழுவதும் ஒரு நாள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதேபோல் அரசும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் பாதிப்பேர் என்னும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் கேரள அரசு திரையரங்குகளில் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயக்கப்படுகின்றன. தற்போது வெளியான சிவகுமாரின் சபதம், ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் கணிசமான அளவில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

ஆனால் கேரளாவில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து வருவதால் அக்டோபர் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க கேரளா அரசு அனுமதித்துள்ளது. அதனுடன் சில நிபந்தனைகளும் விதித்துள்ளது. முதல் நிபந்தனையாக 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இரண்டாவது நிபந்தனை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 50% பார்வையாளர்கள் என்றாலே 25 முதல் 35 சதவீத வசூலை பாதிக்கும். மேலும் இரண்டாவது போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றால் யாரும் திரையரங்குகளுக்கு வரமாட்டார்கள் என திரையரங்கு உரிமையாளர் மற்றும் திரையுலகினரும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பாதிப்பேர் இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த நிபந்தனை தேவைதானா அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என தெரிவித்துள்ளனர். இதனால் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியிட முடியாமல் தவித்து வருகின்றனர்.

Exit mobile version