Home NEWS பதவி ஏற்ற முதல் மாதத்திலே அதிரடி கட்டிய திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!! திட்டங்கள் விபரம்...

பதவி ஏற்ற முதல் மாதத்திலே அதிரடி கட்டிய திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!! திட்டங்கள் விபரம் உள்ளே.

M.K.Stalin

கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்ற 30 நாளில் நடைபெற்ற சாதனைகள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 5 வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.

அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவோருக்கு அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் செலவுகளை அரசே ஏற்கும் என்ற திட்டம்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி ஆக்சிஜன் தொடர்பான மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன் ஆக உயர்த்தி வழங்க கேட்டுக் கொண்டார்.

2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பூரண பாதிப்பு நிவாரண மாக உதவி தொகை முதல் தவணையாக 2000 ரூபாய்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள 70 படுக்கை வசதிகளுடன் கூடிய இரண்டாவது சித்தா சிறப்பு மையம்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் முதல்வரை சந்தித்து இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார்.

ரெம்டேவிசர் மருந்துகளை பதுக்குவோர் மீதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இது அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் விடுத்த கோரிக்கையால் ஏற்று நாளொன்றுக்கு 7000 இல் இருந்து நாளொன்றுக்கு 20 ஆயிரம் வரை அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கப்பட்டது.

சன் குடும்பத்தின் சார்பில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிலையத்திற்கு 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

கரிசல்காட்டு எழுத்தாளர் மறைந்த கி.ராஜநாராயணன் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் ஒரு அரங்கம் நிறுவப்பட்டு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் தெரிவித்துக் கொண்டார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையில் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட சுமார் 4 லட்சம் மனுக்களில் 70,000 மக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆக்சிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழ் நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் ரெம்டேவிசர் மருந்தை பெற இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டது.

நோய் தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரை இறந்தவர்களின் பதிமூன்று பெயர்களில் குடும்ப வாரிசு தாரர்கள் அங்கு தலா 25 லட்சம் வீதம் 3.25 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின்போது உயிரிழந்தவரின் வாரிசுதாரர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணி ஆணை கொடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற நடைமுறைகளை புறக்கணித்து அவசர அவசரமாக கொண்டு வந்த விலை உறுதி மற்றும் பண்ணை சேவை சட்டம் 2020 வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு சட்டம் 20 20 அத்தியாவசிய பொருள் திருத்த சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறை பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கொரோனா தொற்று காரணமாக இறக்க நேரிட்டால் இவர்களது வாரிசுதாரர்களுக்கு 10 லட்சமாக உயர்த்தியும் ஊடகவியலாளர்களுக்கு ஊக்கத்தொகை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார்.

முதல்வர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வந்த சிறுவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கப்பட உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்த ஆதரவின்றி தவிர்க்கும் குழந்தைகளுக்கு தங்களது பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வைப்பீடு பட்டப்படிப்பு வரையிலான கல்வி சட்டம் உடனடி நிவாரண தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

Exit mobile version