Home NEWS RAPIDO OLA மற்றும் UBER சேவைக்கு இனி தடை…!!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அரசு..!!!தமிழ்நாட்டிற்கும்...

RAPIDO OLA மற்றும் UBER சேவைக்கு இனி தடை…!!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அரசு..!!!தமிழ்நாட்டிற்கும் தடை வருமா?

ola rapido uber banned in delhi

மக்கள் பெரும்பாலும் தற்பொழுது ஓலா உபர் போன்ற சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும் இந்நிலையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை என்றும் ராபிடோ, ஓலா உபர் உள்ளிட்ட இருசக்கர வாகன சேவைகளுக்கு டெல்லியில் தடை விதித்துள்ளது.

டெல்லி அரசு மோட்டார் வாகன சட்டம் 1988 அடிப்படையாகக் கொண்டு பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதித்துள்ளது.

தடையை மீறினால் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை உள்ளிட்ட தண்டனைகள் வழங்க கூறி உள்ளது டெல்லி அரசு.

இந்த சேவைகளால் வேலை வாய்ப்புகள் உருவானாலும் பயணிகள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என்று டெல்லி அரசு விளக்கம் அளித்துள்ளது.

குறிப்பாக டெல்லியில் டாக்ஸி மற்றும் பைக் சேவை வழங்கும் நிறுவனங்கள் சரியான பாதுகாப்பை மக்களுக்கு வழங்க முடியாததால் இந்த முடிவு என்று சமூகவலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை டாக்ஸி மற்றும் பைக் சேவைகள் அதிக அளவில் இயங்கி வந்தாலும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதால் தமிழ்நாட்டில் தடை வராது. அது போல தமிழ்நாட்டில் இந்த சேவைகளால் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டால் அரசு இதை பற்றி முடிவு எடுப்பார்கள் அது வரை இந்த சேவைகள் தொடரும் என்றும் தகவல்கள் வந்து உள்ளது.

Exit mobile version