Home NEWS பிட்காயின் மோசடி..!! பில்கேட்ஸ் , ஒபாமா உள்ளிட்ட பல அமெரிக்கா விஐ பி ...

பிட்காயின் மோசடி..!! பில்கேட்ஸ் , ஒபாமா உள்ளிட்ட பல அமெரிக்கா விஐ பி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது..!!

அமெரிக்காவில் பில்லியனர்களாக கருதப்படும் லிஸ்டில் எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. பிட்காயின் ஸ்கெம் என்று அழைக்கப்படும் இந்த சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்குகளை மூலமாக பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சிகளை நன்கொடையாக அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.

இந்த அக்கவுண்ட்டில் எல்லோரும் என்னை பணம் வழங்கச் சொல்லி கேட்கிறார்கள், இதற்கான நேரம் வந்துவிட்டது நீங்கள் ஆயிரம் டாலர் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர் திரும்பி அனுப்புகிறேன் என்று பில்கேட்ஸ் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத்ட்விட் பதிவு செய்ய பட்ட சில நிமிடங்களில் அழிக்கப்பட்டன.

இந்த ட்விட்டிற்கு வெரிபைட் கணக்குகள் எனப்படும் நீல நிற அடுக்குகள் கொண்ட கணக்குகள் பலவற்றை ட்விட் செய்யப்படாமல் நிறுத்தியதுடன் நிறுவனம் கடவுச்சொல்லை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்குகளை தற்பொழுது க்ளிக் செய்ய முடியும் எனவும், ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் பதியப்பட்ட ட்விட் களின் மூலமாக சில நிமிடங்களில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நன்கொடைகள் வந்துள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்கள் மில்லியன் கணக்கான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளது.

Exit mobile version