Home CINEMA NEWS 2022 தமிழ் சினிமாவில் கனவு கன்னி யார் தெரியுமா…? ஒரே படம் நம்பர் ஒன்…!!!

2022 தமிழ் சினிமாவில் கனவு கன்னி யார் தெரியுமா…? ஒரே படம் நம்பர் ஒன்…!!!

no1 actress in tamil

2022 முடிந்து 2023 நாளை பிறக்கப் போகிறது. சினிமாவை பொருத்தவரை இந்த வருடம் பல வெற்றி படங்களை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. ஜெய் பீம், சூரரை போற்று ,இரவின் நிழல் என பல தரமான படங்கள் இந்த வருடம் வந்து இருந்தன. பல கமர்சியல் ஹிட் படங்களும் இந்த வருடம் வெளிவந்தது.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படமும் கமர்ஷியல் அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அது போலவே கதாநாயகிகளும் புதுவரவு அதிகம் இல்லாவிட்டாலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களும் இந்த வருடம் எண்ணிக்கையில் அதிகமே வந்தன.

Sobhita Dhulipala, Trisha in Ponniyin Selvan PS1 Movie HD Images

சமந்தா, நயன்தாரா, அஞ்சலி, திரிஷா போன்ற மிகப்பெரிய கதாநாயகிகள் 31 படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடா வருடம் ரசிகர்களில் மனதை அதிகம் கவர்ந்தவரை கனவு கன்னியாக வலம் வருவார்கள். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ரசிகர்கள் மனதில் முதல் இடத்தில் இருப்பவர் நயன்தாரா.

Actress Trisha in Ponniyin Selvan PS1 Movie HD Images

இந்த வருடம் முதல் இடத்தில் திரிஷா. என்ன தான் வயது ஏறிக்கொண்டே போனாலும் கொஞ்சம் கூட இளமை குறையாத நடிகையாக இருக்கிறார் திரிஷா. இந்த வருடம் திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் படம் பெரிய ஹிட் படமாக அமைந்தது. குறிப்பாக த்ரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் த்ரிஷாவின் அழகை கண்முன் நிறுத்தியது. ஒரே படத்தில் நம்பர் ஒன் இடத்தில் திரிஷா.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் மயோசிடிஸ் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் சினிமாவில் தொடர்ந்து ஜொலிக்கும் சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளை கவர்ந்தார். நம்பர் 2 அவர் தான்.

நயன்தாரா வாழ்க்கையில் இந்த வருடம் மிக முக்கியமான வருடம் என்று கூறலாம். கல்யாணம், குழந்தை, சினிமா வாழ்க்கை என மூன்றிலும் நயன்தாரா வெற்றி பெற்றுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தெலுங்கு திரைப்படங்களில் தன் மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் கீர்த்தி. கீர்த்தி இந்த வருடம் 4 வது இடத்தை பிடித்து உள்ளார்.
ஜோதிகா
பிரியா மோகன்
தமன்னா
ராஷ்மிகா மந்தனா
அனுஷ்கா
ஹன்சிகா மோத்வானி
ஆகியோர் டாப் 10 இடத்தில் உள்ளனர்.

தெலுங்குவில் ரசிகர்களின் கனவு கன்னி ரஷ்மிக்கா மந்தனா க்ரீத்தி ஷெட்டி அவர்கள் தான்.

இதையும் படிங்க : 2023 எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்..!! ஒரு மேற்பார்வை..!!

Exit mobile version