Home NEWS நீட் தேர்வை நடத்தினால் அதனை எதிர்த்து போராடுவோம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

நீட் தேர்வை நடத்தினால் அதனை எதிர்த்து போராடுவோம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ban neet exam in tmailnadu

கொரோனா காலக்கட்டம் என்பதினால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு நேற்று ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது.

மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எப்படி வழங்கப்படும் என்று தனிக் குழு ஒன்றினை அமைத்து ஆலோசித்து வருகிறார் தமிழக முதல்வர்.

தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உகந்ததாக இருக்காது. மாநில கல்வி திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை போன்ற விஷயங்களை எடுத்துரைத்து உள்ளார்.

சமீபத்தில் சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத் தேர்வை பிரதமர் மோடி அவர்கள் மாணவர்கள் நலனுக்காக தேர்வை ரத்து செய்கிறேன் என்று அறிவித்திருந்தார். இது சம்பந்தமாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சில மாணவர்களிடம் உரையாடினார் பிரதமர் மோடி. மாணவர்கள் நலன் கருதிய மோடி அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்வாரா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது மாணவர்களின் உடல்நலன் கருதி சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வினை ரத்து செய்துள்ள பிரதமர் மோடி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு ஒரே நாளில் நடக்கும் என்றாலும் மாணவர்கள் கூடும் இடத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது. தமிழகத்தில் நீட் தேர்வை நடத்தினால் அதனை எதிர்த்துப் போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version