Home NEWS புயல் வருவதற்கு முன்பே தீயாய் இறங்கி வேலை செய்யும் அமைச்சர்கள். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இதோ.

புயல் வருவதற்கு முன்பே தீயாய் இறங்கி வேலை செய்யும் அமைச்சர்கள். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இதோ.

tamilnadu govermment precaution nivar cyclone

நிவர் புயல் கொரோனவை சந்தித்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் தமிழகத்திற்கு மற்றொரு சோதனையாக அமையும் என்று பலரால் கூறப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பித்து விட்டார்கள்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்திற்கு நிவர் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நவம்பர் 25 ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் வழியே மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் மக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் குறிப்பாக 7 மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் தடை செய்துள்ளது தமிழக அரசு. மக்களை பாதுகாப்பதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு.

நிவர் புயலால் தாழ்வான பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் 4713 இடங்களில் முன்னதாகவே ரேஷன் கடைகளுக்கு போதிய உணவு பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்கள். மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இன்றி தவிர்த்திட கூடாது என்பதற்காக முன்னதாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

Exit mobile version