Home CINEMA NEWS அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினி நயன்தாரா டூயட் பாடலின் புதிய அப்டேட் இதோ…!!!

அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினி நயன்தாரா டூயட் பாடலின் புதிய அப்டேட் இதோ…!!!

annathe

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டு உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்குகிறார். ரஜினி ஒரு கிராமத்து தலைவரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் அவரை காண ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்பாடலை விவேகா எழுதியுள்ளார். அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் நடிக்கிறார்கள். குடும்பம் சார்ந்த படமாக அண்ணாத்த திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் மிகப்பெரிய தீபாவளி விருந்தாக இந்த ஆண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என செய்தி வெளியாகி உள்ளது. மேலும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினி நயன்தாரா டூயட் பாடியுள்ள “சாரா காற்றே” என்ற இரண்டாவது சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.

Exit mobile version