Home CINEMA NEWS ஜி பி முத்துவை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய நயன்தாரா..!! ஜி பி முத்துவின் ரசிகர்கள் வருத்தம் …!!

ஜி பி முத்துவை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய நயன்தாரா..!! ஜி பி முத்துவின் ரசிகர்கள் வருத்தம் …!!

nayanthara gp muthu angry

டிக் டாக் செய்து தமிழ் மக்களிடையே நிரந்தர இடத்தை பெற்றிருப்பவர் ஜி பி முத்து. இவர் பேசும் வெள்ளந்தியான பேச்சும், இவர் வழக்கு தமிழும் மக்களை மிகவும் ஈர்த்தது. ஜி.பி. முத்துக்கு என்று ஒரு தனி ஃபேன் பாலோய்ங்கே தமிழ்நாட்டில் இருந்து வருகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக பிக் பாஸில் கலந்து கொள்ள ஜி பி முத்துவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த சீசனில் ஜி பி முத்து கலந்து கொண்டார். ஜி பி முத்து பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு என்று பல ஆர்மிகள் தொடங்கினர். பிக் பாஸில் நூறு நாட்கள் வரை இருந்து ஜி பி முத்து தான் அந்த போட்டியில் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தன் மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று எதார்த்த மனிதராக அந்த சீசனில் இருந்து வெளியேறி மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் ஜி பி முத்து.

பிக் பாஸில் இருந்து வெளிவந்த ஜிபி முத்துவை தேடி பல சினிமா பிரபலங்கள் தற்போது காத்திருக்கின்றனர். அவர் பல படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் ப்ரோமோஷனுக்காக அதன் இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் கூட ஜி பி முத்துவை சந்தித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடித்து வெளிவந்துள்ள கனெக்ட் படத்திற்காக ஜி பி முத்துவை அழைத்திருந்தனர். அப்போது நயன்தாரா பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்க்கலாம் என்றும் ஜிபி முத்துவிடம் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக நயன்தாரா அருகில் கூட ஜிபி முத்துவை விடாமல் ஒரு மூலையில் அவரை உட்கார வைத்து படம் பார்க்க சொன்னதாகவும், இதனால் மனம் வருத்தம் அடைந்த ஜி பி முத்து பாதியிலேயே படத்தை விட்டு வெளியே வெளிவந்துள்ளார். மேலும் அவர் சமூக ஊடகங்களிலும் என்னை பக்கத்தில் உட்கார சொல்வார்கள் என்று கூப்பிட்டு தற்பொழுது பக்கத்தில் கூட விடவில்லை என்று பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி ஜி பி முத்து ரசிகர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நயன்தாராவை பங்கமாக கிண்டல் செய்த மாளவிகா மோகனன்..!!! செம பதிலடி கொடுத்த நயன்தாரா..!!! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.

Exit mobile version