Home CINEMA NEWS தேர்தல் பிரச்சாரத்திற்காக உடலை இழைக்கிறாரா நமிதா..? உடலை குறைக்க பாடாய் படும் நமிதா..!!! வெளியான வீடியோ.

தேர்தல் பிரச்சாரத்திற்காக உடலை இழைக்கிறாரா நமிதா..? உடலை குறைக்க பாடாய் படும் நமிதா..!!! வெளியான வீடியோ.

namitha gym workout video

நமிதா ஒரு நேரத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை. தமிழ் சினிமாவிற்கு எங்கள் அண்ணா என்று விஜயகாந்த் படத்தில் அறிமுகமானார். அதன்பின் சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக ஏ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் வந்த அர்ஜுனா அர்ஜுனா என்ற பாடல் இவரை பிரபலப் படுத்தியது. அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்தார் நமிதா. தல அஜித்தின் பில்லா படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் அழகிய தமிழ் மகன் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். ஒரு நேரத்தில் கமர்சியல் படங்களுக்கு நமீதாவின் கவர்ச்சி தேவைப்பட்டது அதனால் தயாரிப்பாளர்கள் நமிதாவின் கால்ஷீட்டை கேட்க சொல்வார்கள்.

2017 ஆம் ஆண்டு வீரேந்திர என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். தன் கணவருடன் ஏதாவது புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்த நமீதா. தன் கணவன் மேல் ஏறி சவாரி செய்வது போல ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாவம் அந்த மனுஷன் என்று கலாய்க்க தொடங்கினர்.

கச்சிதமாக இருந்த நமிதா உடல் எடை கூடி கொழுகொழுவென்று இருப்பதால் படவாய்ப்புகளும் கம்மியாக இருக்கிறது அதே நேரத்தில் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறது என்ற காரணத்தினால் அடிக்கடி ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் நமீதா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக ஜிம் சென்று படாதபாடுபட்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் BJP கட்சியில் இணைந்த நமிதா தேர்தல் பிரச்சாரத்தின்போது கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னமோ கடினமான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.

Exit mobile version