Home CINEMA NEWS சிவகார்த்திகேயன் தந்தை இறந்ததற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா தான்..!!! விவரம் தெரியாமல் பேசவேண்டாம் H ராஜாவை...

சிவகார்த்திகேயன் தந்தை இறந்ததற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா தான்..!!! விவரம் தெரியாமல் பேசவேண்டாம் H ராஜாவை எச்சரித்த நக்கீரன் கோபால்.

sivakarthikeyan dad dead

சமீபத்தில் பாஜக எச் ராஜா செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் ஜெயப்பிரகாஷ் சிவகார்த்திகேயன் உடைய தந்தை என்று குறிப்பிட்டு இருந்தார். எச் ராஜா கூறிய தகவல் அனைத்தும் தவறு சிவகார்த்திகேயன் உடைய தந்தை ஜெயபிரகாஷ் இல்லை என்று சமூக ஊடகங்களில் எச் ராஜாவை விவாதித்து வந்தனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் எச் ராஜா ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக பேசுகிறார் சிவகார்த்திகேயன் உடைய தந்தை பெயர் ஜெயபிரகாஷ் அல்ல தாஸ் அவர் ஒரு கம்பீரமான நேர்மையான போலீஸ் ஆபீஸர்.

சிவகார்த்திகேயன் தந்தை தாஸ் அவர்கள்

எனக்கு சிவகார்த்திகேயன் உடைய தந்தை தாஸ் அவர்களை நன்றாக தெரியும் நான் என்னுடைய வீட்டில் நடக்க இருக்கும் விசேஷத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக தாஸ் அவர்களின் வீட்டிற்கு சென்று உள்ளேன் அப்பொழுது சிவகார்த்திகேயன் தான் அவருடைய தந்தையை பார்க்க எங்களை அழைத்துச் சென்றார். அவரைப் பார்த்து நீங்கள் தாஸ் அண்ணா மகனா என்று கேட்டேன் அதற்கு ஆம் அண்ணா என்று கூறினார்.

அந்த நேரத்தில் தான் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமார் என்பவரை கடத்தி வைத்திருந்தார் அந்த நேரத்தில் வீரப்பனிடம் சமரசம் பேச இரண்டு மாநில அரசும் என்னை தூதுவராக அனுப்பி வைத்தார்கள். வீரப்பனிடம் நடந்த பேச்சுவார்த்தையில் வீரப்பன் திருச்சி ஜெயிலில் உள்ள 5 தமிழ் தீவிரவாதிகள் ஆன என்னுடைய ஆட்களை வழக்குகளில் இருந்து விடுவித்து விடுதலை செய்யுங்கள் நான் உடனே ராஜ்குமார் அவர்களை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று கூறினார்.

இந்த செய்தியை கலைஞரிடம் வந்து கூறினேன். உடனே திருச்சி ஜெயிலுக்கு சென்று அந்த ஐந்து பேரையும் சந்திக்க சென்றபோது சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் தான் திருச்சி மொத்த ஜெயிலுக்கும் கண்காணிப்பாளர் அவருடைய அனுமதி பெற்றபின் அந்த ஐந்து பேரையும் சந்தித்து வீரப்பன் கூறியதை அவர்களிடமும் அவர்கள் கூறுவதை வீரப்பன் இடமும் தெரிவிக்க தூதுவராக சென்றேன்.

அப்போது அவர்களை சந்திக்க காத்திருந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன் தந்தை தாஸ் அவர்கள் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் அண்ணா அவனுக்கு ஏதாவது வேலை இருந்தா சொல்லிவிடுங்கள். மிமிக்ரி பண்ணிக்கிட்டு இருக்கான் படிப்பைவிட அதுலதான் இன்ட்ரஸ்ட் இருக்கா என்று என்னிடம் கூறியிருந்தார். நானும் தம்பி வரச்சொல்லுங்கள் ஏதாவது எனக்கு தெரிந்த டிவி சேனல்களில் சொல்லி விடுகிறேன் என்றேன்.

கன்னட நடிகர் ராஜ்குமார் – நக்கீரன் கோபால்

அப்பொழுது தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார் என்னையும் கலைஞரையும் ரஜினியையும் கிருஷ்ணா மீதுதான் முதலில் டார்கெட் செய்தார். என் மீது பல கொலை வழக்குகளை போட்டார்கள். நான் தலைமறைவாக இருந்தேன் அப்போது எனக்கு தெரிந்த நபரிடம் ஒரு கால் வந்தது அப்போது அண்ணா தாஸ் இறந்துட்டாரு அவர் பணியில் இருக்கும்போது மாசிவ் அட்டாக் வந்து இறந்துட்டாரு என்று தகவல் தெரிவித்தார்கள்.

ஐயையோ நல்ல மனுஷன் ஆச்சு எப்படி இறந்தார் நல்ல ஆரோக்கியமாக தானே இருந்தார் என்று கேட்டேன் அதன் பின் தான் எனக்கு தகவல் கிடைத்தது ஜெயலலிதா அரசு அந்த நேரத்தில் கோயமுத்தூரில் ஜெயில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த தாஸ் அண்ணாவிடம் நக்கீரன் கோபாலும் கலைஞரும் மற்றும் உங்கள் கன்ட்ரோலில் இருந்த ஐந்து தமிழ் தீவிரவாதிகளும் சேர்ந்து கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வீரப்பனுக்கு திட்டம் தீட்டி தந்ததாக கையெழுத்து கேட்டு அவருக்கு பிரஷர் கொடுத்துள்ளனர்.

தாஸ் அவர்கள் நேர்மையான போலீஸ் அதிகாரி என்பதால் எதற்காக அப்படி கையெழுத்து போட வேண்டும் ஏன் பொய்யான கையெழுத்து போட வேண்டும் என்று ஏக்கத்திலே இருந்திக்கிறார் அது சம்மந்தமாக சில அழுத்தத்தினால் தான் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்தார்.

சிவகார்த்திகேயனின் தந்தை இறந்ததற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா மற்றும் உயர் காவல்துறை அதிகாரியாக இருந்த முகமது அலியும் தான் என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தற்பொழுது பார்க்கையில் பெருமையாக இருக்கிறது தம்பி விஜய் கூட என்னுடைய குழந்தைகளும் உங்களை படத்தை விரும்பிப் பார்க்கிறார்கள் என்று கூறியிருப்பது சிவகார்த்திகேயன் வளர்ச்சியை காட்டுகிறது.

இதெல்லாம் தெரியாமல் எச் ராஜா ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்த பொய் பேசுவது சரி இல்லை என்று எச்சரித்தார் நக்கீரன் கோபால்.

Exit mobile version