Home NEWS 100 நாட்களில் மக்களின் குறைகளை தீர்த்துவிட்டார்களா.? அளந்து விட்டார்களே சீரும் சீமான்..!!!

100 நாட்களில் மக்களின் குறைகளை தீர்த்துவிட்டார்களா.? அளந்து விட்டார்களே சீரும் சீமான்..!!!

seeman comment about complaint box

நாம் தமிழர் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் பெரிய வெற்றி பெறவல்லை என்றாலும் தற்போது மூன்றாம் இடத்தில் தமிழகத்தில் வலுவான கட்சி என்றே சொல்லலாம்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை பார்க்கையில் நாம் தமிழர் கட்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. மக்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு திமுக, அதிமுகவிற்கு அடுத்து நல்ல வரவேற்ப்பை கொடுத்துள்ளார்கள்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களும் இந்த தேர்தலில் 50% ஆண் வேட்பாளர்கள் 50 %பெண் வேட்பாளர்கள் என்ற பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். சீமானின் இந்த மாற்றம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் அரசியலில் நிற்க வேண்டும் என்கின்ற எண்ணம் புதிதாக இருந்தது.

தற்பொழுது சீமான் வெளிப்படையாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார் சமீபத்தில் திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும் திமுக ஆட்சி அமைத்தவுடன் 100 நாட்களில் தீர்வு எட்டப்படும் என வானளவு அளந்தார்கள் 50 நாட்களை கடந்து விட்டோம் பாதி காலக்கெடு முடிந்து விட்டது. என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள் எப்போது எல்லாவற்றையும் தீர்க்க போகிறீர்கள் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை மக்களின் பிரச்சினைகளை கடிதங்களை பெற்ற பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்து விட்டதா இல்லை பெட்டி தொலைந்து விட்டதா? என்று சீறி உள்ளார் சீமான்.

அதற்கு நெட்டிசன்கள் செய்திகள் பார்க்க மாட்டீர்களா 100 நாளில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உதவி போய் சேர்ந்துவிட்டது . கொரோனா கால கட்டத்தில் மக்கள் பாதுகாப்புக்கும் அரசு நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறது. முதல்வர் மீது நம்பிக்கை இருக்கு பார்க்கலாம் என்று என்று பதில் அளித்து வருகிறார்கள்.

Exit mobile version