Home NEWS பிரதமர் நரேந்திர மோடியின் காதில் முஸ்லீம் இளைஞர் கூறியது என்ன தெரியுமா..!!! அவரே வெளியிட்ட தகவல்.

பிரதமர் நரேந்திர மோடியின் காதில் முஸ்லீம் இளைஞர் கூறியது என்ன தெரியுமா..!!! அவரே வெளியிட்ட தகவல்.

narendra modi muslim man

மோடி நமது நாட்டின் பிரதமர் பிஜேபி கட்சியின் தலைவர். எப்படியாவது வட இந்தியாவில் பிஜேபி கட்சியினை கொண்டு வந்தது போல தமிழகத்தில் பிஜேபி கட்சியினை கொண்டு வரவேண்டும் என்று ஒரு இலக்கோடு முயற்சி செய்து வரும் மோடி சமீபத்தில் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி கடந்த 2ஆம் தேதி சோனர்பூர் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது ஹெலிகாப்டரில் புறப்படும்போது முஸ்லிம் இளைஞரொருவர் மோடியை சந்தித்தார் அப்போது அவரது காதில் அந்த முஸ்லிம் இளைஞர் ஏதோ சொல்ல அவரை அரவணைத்து அவர் சொல்வதை உன்னிப்பாக கேட்டார். அவர் என்ன பிரதமர் மோடியிடம் பேசினார் என்பது சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறியது.

இந்த புகைப்படத்தை பார்த்த ஏ ஐ எம் ஐ எம் தலைவர் ஓவைசி அந்தப்படத்தில் உள்ளவர் முஸ்லிம்கள் கிடையாது தேர்தலுக்காக பாஜக நாடகம் நடத்துகிறார்கள் என்று எதிர்மறையாக கூறினார்.

அதன்பின் அந்த இளைஞரை தேடி கண்டுபிடித்தனர் கொல்கத்தாவின் மீடியாபுரூஸ் பகுதியை சேர்ந்த ஜீல்பிகர் அலி இவருக்கு வயது 38 அவரை சந்தித்து நடந்ததை பற்றி கேட்டு உள்ளார்கள் சில மீடியாவை சேர்ந்தவர்கள்.

அவர் கூறியது ஏப்ரல் 2ஆம் தேதி சோனர்பூரில் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது 40 வினாடிகள் மட்டுமே நான் அவருடன் பேசினேன். இது நாற்பது ஆண்டுகள் வரை என் வாழ்வில் நீங்காத ஒன்றாகவே இருக்கும். என் பெயரைக் கேட்ட பிரதமர் உனக்கு ஏதாவது வேண்டுமா என்று அன்போடு கேட்டார் எனக்கு எம்எல்ஏ சீட்டு வேணாம், கவுன்சிலர் சீட் வேணாம், உங்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதும் என்று கூறினேன் அதற்கு உடனடியாக புகைப்படம் எடுப்போரை அழைத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார் மோடி.

நான் முஸ்லிம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாஜகவில் இணைந்துள்ளேன் தற்போது சிறுபான்மையினர் பிரிவு தலைவராக பதவி வகிக்கிறேன் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற விரும்பினேன் அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

வடநாட்டில் எப்படியோ ஆனால் தமிழ்நாட்டில் எந்த நாடகமும் நடத்த முடியாது என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version