Home CINEMA NEWS பிக்பாஸ் முகேன் ராவ் முதல் படத்திற்கு நம்ம கேப்டன் டைட்டில்..!!! படத்தின் பெயர் என்ன தெரியுமா.!!!

பிக்பாஸ் முகேன் ராவ் முதல் படத்திற்கு நம்ம கேப்டன் டைட்டில்..!!! படத்தின் பெயர் என்ன தெரியுமா.!!!

biggboss mugen rao movie first look

முகேன் ராவ் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றவர். பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் நன்றாக பழகிய முகேன் தமிழ் மக்கள் மனதிலும் ஒரு பெரிய இடத்தை பிடித்தார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டில் முகேன் பாடிய “என்ன மறந்த என்ன மறந்த” என்ற பாடல் மாபெரும் ஹிட்டானது இளைஞர்கள் மத்தியில். பிக்பாஸில் வெற்றி பெற்றதற்கு பிறகு முகேன்க்கு நிறைய பட வாய்ப்புகள் வந்ததாம். அதில் முதலாக அவர் தேர்வு செய்த இயக்குனர் 2011 ஆம் ஆண்டு நானி, நித்யா மேனன் நடிப்பில் வெளியான வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் என்பவரை தான்.

இவர் ஏற்கனவே வெப்பம் என்ற படத்தை இயக்கி உள்ளார். முகேஷுக்கு இந்தப் படம் தான் முதல் படம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு தலைப்பு நம்ம கேப்டன் பட டைட்டில் தான். ஆம் கேப்டன் ஹீரோவாக நடித்து தளபதி விஜயின் அப்பா SAC இயக்கிய “வெற்றி” என்ற படத்தின் டைட்டிலை முகேன் ராவ் வின் இந்தப் படத்திற்கும் வைத்துள்ளார்கள். வெற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள் முகேன்.

Exit mobile version