Home NEWS கல்லூரி மாணவர்கள் 25 பேர் சேர்ந்து தயாரித்த செயற்கை கோளில் மோடி உருவப்படம்..!!! மகிழ்ச்சியில் பாஜகவினர்..!!!

கல்லூரி மாணவர்கள் 25 பேர் சேர்ந்து தயாரித்த செயற்கை கோளில் மோடி உருவப்படம்..!!! மகிழ்ச்சியில் பாஜகவினர்..!!!

satish dhawan satellite

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கத்தில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் இளைஞர்களை ஊக்குவித்து வருகிறது. அந்த நிறுவனம் சார்பாக கல்லூரி மாணவ மாணவர்கள் 25 பேர் கொண்ட குழு புதிதாக செயற்கைக் கோள் ஒன்றை தயாரித்து விண்ணில் ஏவியுள்ளது.

1.9 கிலோ எடை கொண்ட செயற்கை கோளுக்கு மறைந்த விஞ்ஞானி சதீஷ்தவான் அவர்களின் பெயரை வைத்துள்ளார்கள். பிப்ரவரி 28ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி- 51 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அந்த செயற்கைக்கோளில் பிரதமர் மோடி அவர்களின் உருவப்படமும் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பகவத் கீதை வாசகம் ஒன்றை அந்த செயற்கைக்கோளில் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் கூறும்போது விண்வெளி ஆய்வில் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இதற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரதமர் மோடி அவர்களின் உருவப் படத்தை செயற்கைக்கோளில் பதித்து உள்ளோம்.

இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் நிலவும் வானிலை ஜாதகங்கள் கதிர்வீச்சு இயந்திரங்கள் இடையேயான தகவல் தொடர்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version